சௌ சௌவில் இவ்வளவு நன்மைகள் இருக்குனு தெரிஞ்சா நீங்கள் அதை சாப்பிடாம இருக்க மாட்டீங்க…

First Published Apr 20, 2017, 2:09 PM IST
Highlights
You know that there are so many advantages in Chow Chow You will not be eating it


சௌ சௌவில் உள்ள சத்துகள்:

சௌ சௌவில் வைட்டமின் ஏ, பி, சி, கே போன்ற சத்துகள் அடங்கியுள்ளன.

100 கிராம் சௌ சௌவில்

17.8% கார்போஹைட்ரேட்,

10.7% ஸ்டார்ச்,

10.5% போலேட் சத்து,

5.4% புரதசத்து,

6.7% சுண்ணாம்பு சத்து,

4.8% பாஸ்பரஸ்,

9% மாங்கனீசு போன்ற சத்துகள் அடங்கியுள்ளது.

சௌ சௌ தரும் நன்மைகள்:

1.. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சௌசௌ காயை சாப்பிடலாம். இது நரம்பு தளர்ச்சியை போக்கி நரம்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

2.. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளும் சக்தி இதற்கு உண்டு..

3.. உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து உடலை சமநிலையில் வைத்துக் கொள்ளும்.

4.. மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் இந்த காயை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

5.. பெருங்குடல், சிறுகுடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கி குடல் மூலம் உருவாகக்கூடிய பிரச்சனைகளை சரிப்படுத்துகிறது.

6. கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கை, கால்களில் வீக்கம் ஏற்படும். ஆதலால் நீர்சத்து மிகுந்த காய்களில் ஒன்றான சௌசௌவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

7.. இதை உணவில் சேர்த்துக் கொள்வதால் குழந்தையையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.

8.. சிறு வயதிலேயே முகச்சுருக்கம் ஏற்பட்டு விட்டதே என கவலைப்படுபவர்கள் சௌசௌவை உணவில் தாராளமாக பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள சுருக்கம் நீக்கி விடும்.

9.. சௌசௌவில் காணப்படும் வைட்டமின்கள் புற்றுநோய் தடுப்பியாக செயல்படுகிறது. எனவே இதை உணவில் பயன்படுத்தினால் புற்றுநோய் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும்.

10.. தைராய்டு கோளாரால் அவதிபடுபவர்கள் சௌசௌவை பயன்படுத்தலாம்.  சௌசௌவில் காணப்படும் காப்பர், மாங்கனீசு, தைராய்டு நோயால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இதை உணவில் எடுத்துக் கொண்டால் தைராய்டு கோளாறு நீங்கும்.

11.. சௌசௌவில் கால்சியம் சத்துகள் காணப்படுவதால் எலும்புகளை வலுப்பெற செய்கிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு சௌசௌ காயை உண்ண கொடுக்கலாம்.

12.. கொழுப்புகளை குறைக்கவும் இது பயன்படுகிறது. வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் சேர்ந்து இருக்கும் அதிகபடியான கொழுப்புகளை கரைக்க சௌசௌவை சூப் செய்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும். சௌசௌவை வேகவைத்து உப்பு, மிளகு, தண்ணீர் சேர்த்து சூப் செய்து காலை, மாலை வேளையில் உணவிற்கு முன் இதை பருகலாம்.

click me!