Norovirus: இந்தியாவை அச்சுறுத்தும் “நோரோ வைரஸ்” - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தப்பிப்பது எப்படி.?

By Raghupati R  |  First Published Mar 7, 2023, 8:54 AM IST

இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் நோரோ வைரஸ் தொடர்பாக வயிற்றுப் பிரச்சனை அதிகரித்து வருகிறது. மேலும் இந்தியாவிலும் குழந்தைகளிடையே நோரோ வைரஸ் பதிவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


தற்போது பல வைரஸ் நோய்கள் வருவதற்கான அறிகுறிகள் உள்ளன என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். 

அவற்றில் சில நோரோ வைரஸ் மற்றும் அடினோ வைரஸ் போன்ற பழைய வைரஸின் தாக்கம் மீண்டும் ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் தெரிவித்துள்ளனர். நோரோ வைரஸ் புதியது அல்ல. ஆனால் கடந்த சில மாதங்களில் உலகளவில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் சில குழந்தைகளிடையே நோரோ வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tap to resize

Latest Videos

நோரோ வைரஸ் மிகவும் தொற்றக்கூடியது ஆகும். அசுத்தமான பரப்புகளில் பரவுகிறது. ஒருவருக்கு எந்த அறிகுறியும் இல்லையென்றாலும், அவர்கள் இன்னும் தொற்றுநோயாக இருக்கலாம். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு  பொதுவாக மூன்று நாட்களுக்குள் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல், தலைவலி, சோர்வு, உடல் வலி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பதாக கூறுகிறார்கள்.

இந்த நோரோ வைரஸ் சிறு குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் முதியவர்களுக்கும், தடுப்பாற்றல் குறைந்தவர்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், விடுதிகள், மக்கள் தங்கும் இடங்கள், உணவுக்கூடங்கள் மற்றும் நெருக்கமான வசிப்பிடங்களில் ஒரே நேரத்தில் பலருக்கு எளிதாகத் தொற்றிவிடும் என்று எச்சரிக்கின்றனர்.

தடுப்பது எப்படி ?

உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். குறிப்பாக சமைக்கும் போது உங்களுடன் வசிக்கும் ஒருவர் இருந்தால், அசுத்தமான பொருட்கள், உணவு மற்றும் தண்ணீரைத் தவிர்க்கவும், நோயாளி இருந்தால் தனிமைப்படுத்தவும். நீரிழப்பைத் தடுப்பதே சிகிச்சையின் முக்கிய பகுதி ஆகும்.

தலைச்சுற்றல் போன்ற நீரிழப்பு அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், தீவிர சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக எலக்ட்ரோலைட்டுகளை கொடுக்கலாம். புரோபயாடிக்குகள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகின்றது. வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். இது தொற்றுநோயைத் தடுக்கிறது. மேலும் சில பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரை அணுக வேண்டும்.

இதையும் படிங்க..Kushboo: 8 வயதில் பாலியல் தொல்லை கொடுத்தார் என் தந்தை.. நடிகை குஷ்பு வெளியிட்ட பரபரப்பு தகவல்

click me!