தினமும் இந்த நேரங்களில் தண்ணீர் குடித்தால் ரொம்ப நல்லது…

First Published Sep 1, 2017, 1:16 PM IST
Highlights
Watering is very good at these times everyday ...


தண்ணீரை ஒருசில செயல்களுக்கு முன்னர் குடிப்பது என்பது முக்கியம். ஏனெனில் அந்நேரங்களில் தண்ணீர் குடிப்பதால், பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

தினமும் எந்தெந்த நேரங்களில் தண்ணீர் குடித்தால் என்னென்ன நன்மை கிடைக்கும்

காலையில் எழுந்த பின்

காலையில் எழுந்த உடன், முகத்தைக் கழுவியப் பின் 2 டம்ளர் தண்ணீர் குடிப்பதால், உடலுறுப்புக்கள் சீராக செயல்பட ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, உடலில் தேங்கியுள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறும்.

டீக்கு முன்

காபி மற்றும் டீயில் pH அளவானது 5 மற்றும் 6 ஆக உள்ளது. இவை உடலில் அசிடிட்டியின் அளவை அதிகரித்து, அல்சரை ஏற்படுத்தும். ஆனால் டீ அல்லது காபி குடிப்பதற்கு முன் 1 டம்ளர் தண்ணீர் குடித்தால், இப்பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

குளிப்பதற்கு முன்

குளிப்பதற்கு முன் 1 டம்ளர் தண்ணீர் குடிப்பதால், இரத்த அழுத்தம் குறையும். ஆனால் சுடுநீரில் குளிக்கும் முன் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

உணவிற்கு முன்

ஒவ்வொரு முறை உணவு உண்ணும் 1/2 மணிநேரத்திற்கு முன்பும் 1 டம்ளர் தண்ணீர் குடித்தால், செரிமானம் சீராக நடைபெறுவதோடு, உண்ணும் உணவின் அளவு குறைந்து, உடல் எடையையும் குறைக்கலாம்.

உடற்பயிற்சிக்கு முன்

மற்றும் பின் உடற்பயிற்சிக்கு முன் மற்றும் பின் தண்ணீர் குடிப்பதால், உடற்பயிற்சியினால் வறட்சியடைந்த உடலுறுப்புக்கள் ஈரப்பதமூட்டப்பட்டு, சுறுசுறுப்புடன் செயல்பட உதவும்.

படுக்கைக்கு முன்

தினமும் இரவில் படுப்பதற்கு முன் 1 டம்ளர் தண்ணீர் குடிப்பதால், பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

click me!