தட்டையான, அழகான வயிற்றைப் பெற வேண்டுமா? இந்த டிப்ஸ் உங்களுக்காக…

 
Published : Jun 23, 2017, 01:38 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
தட்டையான, அழகான வயிற்றைப் பெற வேண்டுமா? இந்த டிப்ஸ் உங்களுக்காக…

சுருக்கம்

Want to get a flat beautiful stomach These tips are for you ...

1.. இதயத்திற்கு மிகவும் பயன்தரக்கூடிய பூண்டு, சிஸ்டோலிக் மற்றும் டலங்டோலிக் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இவை நல்ல கொழுப்பு  சத்துக்களை சேர்க்க உதவாமல் டிரைகிளிசனாடுகளை குறைக்க செய்கின்றது. இவை பெருமளவில் உடல் எடையை குறைக்க உதவும்.

2.. குருதிநெல்லி அல்லது கிரென்பெற்றி என்று கூறப்படும் பழ வகையில் அதிக அளவு மேலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் ஆகியவை உள்ளன. அவை  செரிமானத்திற்கு உதவுகின்றது. இவை கடுமையான கொழுப்புகளை கரைத்து நிணநீர் சுரப்பிகளில் உள்ள கொழுப்புகளையும் கரைத்து உடலை  சீர்செய்கிறது. குருதிநெல்லி சாறு சர்க்கரை சேர்க்காமல் அருந்தினால் பெரும் வித்தியாசத்தை காண முடியும்.

3.. கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவது மிகவும் அவசியமாகும். மிகவும் அழுத்தம் அடைந்த கல்லீரலால் கொழுப்புகளை கரைக்க முடிவதில்லை. இதனால் கொழுப்பானது வயிற்று பகுதியில் சேர்ந்து விடுகின்றது. ஆனால் எலுமிச்சை சாறு சுரப்பிகளை அதிகப்படுத்தி கல்லீரலை  சுத்தம் செய்து அதன் அன்றாட வேலைகளை செய்ய உதவுகின்றது.

4.. பொதுவாக இஞ்சி செரிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பது தெரியும். ஆனால் அவை உடம்பில் உள்ள வெப்பத்தை அதிகப்படுத்தி கொழுப்பை கரைக்க  உதவுகின்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும். தொப்பை வருவதற்கு அதிகமாக சாப்பிடுவது, அதிக மனஅழுத்தம் மற்றும் குறைந்த உடற்பயிற்சி  ஆகியவை காரணமாகும். இஞ்சியினால் அந்த பிரச்னைகளிலிருந்து உங்களை சுலபமாக விடுவிக்க முடியும்.

5.. மீன் எண்ணெயில் ஒமேகா-3 என்ற அமிலப்பொருள் உள்ளது. மேலும் இவற்றில் உள்ள ஈகோசாபென் டோனோலிக் அமிலம், டோக்கோசா  ஹெக்சானோலிக் அமிலம் மற்றும் லினோலின்ச் அமிலம் கொழுப்பை கரைக்க உதவுகின்றது. மீன் எண்ணெய் கிடைக்காவிட்டால் மீன்களை  உட்கொண்டு பலன்பெறலாம்.

PREV
click me!

Recommended Stories

Exercises For Joint Pain : மூட்டு வலி அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி!! ஒரே வாரத்தில் நிவாரணம்; ஒரே ஒரு பயிற்சி போதும்
Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!