ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது…

 
Published : Oct 28, 2016, 04:10 AM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது…

சுருக்கம்

குழந்தைகளுக்கு சிறு வயதில் சொல்லிக் கொடுப்பதைதான், அவர்கள் காலம் முழுக்க பின்பற்றுவர். குழந்தைப் பருவத்தில் இருந்தே சில ஆரோக்கியமான விடயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு உணவு மற்றும் பொது சுகாதாரம் குறித்துச் சொல்லிக் கொடுக்க வேண்டியது மிக அவசியம்.

தண்ணீர் பாட்டில்:

பிளாஸ்டிக் மற்றும் பெட் பாட்டில்களில் ரசாயனங்கள் வெளிப்பட்டு நீரில் கலக்கும். எனவே குழந்தைகளுக்கு இத்தகைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

அலுமினியம், எவர்சில்வரால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். முடிந்தவரை பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் தவிர்க்க சொல்லித்தர வேண்டும்.

டிஃபன் பாக்ஸ்:

அதேபோல், பிளாஸ்டிக்கால் ஆன டிஃபன் பாக்ஸ் நல்லது அல்ல. சூடான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக்குடன் வேதி வினையில் ஈடுபட்டு மோசமான வேதிப் பொருட்களை வெளியிடும். எவர்சில்வரில் செய்யப்பட்ட டிஃபன் பாக்ஸ் நல்லது. தற்போது, ஹோட்பேக் வசதிகொண்ட டிஃபன்பாக்ஸ்களும் கிடைக்கின்றன.

பல வண்ண உணவுகள்:

பல்வேறு விதமான நிறங்கள் கொண்ட பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது விளையாட்டிற்கு மட்டும் அல்ல. உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமே. உங்கள் குழந்தைகளுக்கு வானவில் உணவுகளைச் சாப்பிட பழக்குங்கள். அவை குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

உணவு நேரம்:

குழந்தைகளுக்கு காலை உணவுவை சரியான நேரத்தில் சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். மேலும் குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளை சாப்பிட அறிவுறுத்தவேண்டும். குழந்தைகளுக்கு நொறுக்குதீனிற்க்கு பதிலாக முழு தானியங்கள் கொண்ட உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். இது அவர்களின் உடல் வளர்ச்சியை சிறப்பான அளவில் மேம்படுத்தும். காலை உணவுகளில் அதிக அளவு தானியங்களை சேர்த்துக்கொண்டால் நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும்.

விளையாட்டு:

குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டுகளை விளையாட அனுமதியுங்கள். இது அவர்களின் மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கவும், உடல் வளர்ச்சியடைவும் உதவும். குழந்தைகளுக்கு நீச்சல், வில்வித்தை, மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற பயிற்சிகளை சொல்லிகொடுங்கள்.

வாசிப்பு திறன்:

குழந்தைகளின் வாசிப்பு திறன் அவர்களின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துங்கள். உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து வாசிப்பு திறனை அவர்களுக்கு சொல்லிகொடுங்கள்.

PREV
click me!

Recommended Stories

Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!
Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க