ஆரஞ்சும் தேனும் கலந்தால்...

Asianet News Tamil  
Published : Oct 28, 2016, 04:07 AM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
ஆரஞ்சும் தேனும் கலந்தால்...

சுருக்கம்

தேவையானவை:

கமலா ஆரஞ்சு – 2, தண்ணீர், ஐஸ் கட்டி, தேன் தேவையான அளவு.

செய்முறை:

கமலா ஆரஞ்சு பழத்தை தோல், விதைகளை நீக்கி, சிறிதளவு தேன், தண்ணீர், ஐஸ் கட்டிகளை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்ட ஆரஞ்சு – தேன் ஜூஸ் ரெடி.

பலன்கள்

வைட்டமின் சி நிறைவாக உள்ளது. ஒருநாளுக்குத் தேவையான அளவு வைட்டமின் சி கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள ‘பெக்டின்’ எனும் இரசாயனம், குடலில் உள்ள நச்சுக்களை அகற்றும். செரிமான மண்டலத்தைச் சீர்செய்யும்.

அன்டி-ஆக்சிடன்ட் நிறைந்தது. எனவே, புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும். குறிப்பாக, நுரையீரல் மற்றும் வயிறு தொடர்பான புற்றுநோய்களைக் தடுக்கும்.

பொட்டாசியம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளன. தொடர்ந்து ஆரஞ்சு ஜூஸ் குடித்துவந்தால், சருமம் பொலிவாகும்.

மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

PREV
click me!

Recommended Stories

இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!
இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!