இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு துளசி தான் சிறந்த மருந்து…

 
Published : Nov 08, 2017, 02:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு துளசி தான் சிறந்த மருந்து…

சுருக்கம்

Tulsi is the best medicine for these kinds of problems ...

துளசியை நிழலில் உலர்த்திப் பின் பொடித்து எடுத்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி துளசிப் பொடியை 1தம்ளர் நீரில் இட்டுக் காய்ச்சிக் குடிப்பதால் சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுபடுத்தப்படும் ஒரு நாளைக்கு மூன்று வேளை இப்படித் துளசித் தீநீர் சாப்பிட சர்க்கரை அளவு நாளடைவில் குறைந்துவிடும்.

குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி துளசிசாறும் பெரியவர்களுக்கு இரண்டு தேக்கரண்டி அளவும் தினம் இருவேளைப் பருகச் செய்வதால் இருமல், ஆரம்ப நிலை நுரையீரல் தொற்று நோய்கள், மூச்சு விடுவதில் சிரமம், மனஉளைச்சல் காரணமாகத் தோலில் ஏற்படும் நோய்கள், செரிமானமின்மை ஆகிய நோய்கள் போகும்.

1 ஸ்பூன் துளசிச் சாறு, ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு, 5மிளகு ஆகிய மூன்றையும் ஒரு சேரக் கலந்து உள்ளுக்குக் குடிப்பதால் நுரையீரல் பாதிப்பால் ஏற்படும் ஆஸ்த்துமா குணமாகும். இருமல்,குத்திருமல், வறட்டு இருமல் என வந்தபோதும் துளசிச்சாறோடு தேன் கலந்து குடிப்பதால் இருமல் விரைவில் தணிந்து சுவாசப் பாதை குணம் பெறும்.

துளசி சாறை தோலின் மீது ஏற்படும் வேர்க்குரு போன்ற துன்பங்களுக்கும், பல்வேறு தோல் நோய்களுக்கும் குறிப்பாகத் தேமல் போன்றவற்றுக்கும் மேல்பூச்சு மருந்தாக பூசி வர தோல் நோயகள் தொலைந்து போகும். துளசி சாற்றினை ஓரிரு துளிகள் காதுகளில் விடுவதால் காது நோய் குணமாகும்.

புட்டாலம்மை எனப்படும் பொன்னுக்கு வீங்கி என்னும் நோய் வந்து துன்புறுகையில் காதுகள் இரண்டிலும் துளசிச் சாறு சில துளிகள் விடுவதோடு உள்ளுக்கும் ஓரிரு தேக்கரண்டி பருகச் செய்து வீக்கத்தின் மேல் துளசி சாறும் மஞ்சளும் கலந்து பூசி வருவதால் மேற்சொன்ன நோய் விரைவில் குணமாகும்.

50.மி.லி துளசிச் சாற்றுடன் 5மி.லி தேன் கலந்து அன்றாடம் ஒரு வேளை என 3 மாதங்கள் பருகி வர சிறுநீரகக் கற்கள் கரைந்து வெளியேறிவிடும். சிறுநீர்பாதையும் சீர்படும். துளசி இலைச்சாறும் நீரும் கலந்து மணி நேரத்துக்கு 1முறை பருகுவதால் கடுங்காய்ச்சலும் காணாது போகும்.

துளசி இலை, பூக்கள், வேர் ஆகிய அனைத்துமான மூலச்சாறு தேள் மற்றும் பாம்புக் கடி விஷத்தைப் போக்கக் கடிய அருமருந்தாகும். துளசி இதுபோன்ற பல்வேறு இன்ன பிற நோய்களையும் போக்க வல்லது. என்பதால் இன்றே ஒவ்வொரு வீட்டிலும் துளசியை வளர்த்துத் துன்பம் தவிர்க்க வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

Healthy Hair : இந்த உணவுகள் '40' வயசுக்கு பின் முடி உதிர்தலை அதிகரிக்கும்; எதை சாப்பிடக் கூடாது தெரியுமா?
Butter For Glowing Skin : தேவதை மாதிரி அழகில் மிளிர 'வெண்ணெயுடன்' இந்த '1' பொருள் சேர்த்து முகத்தில் தடவுங்க! நல்ல ரிசல்ட்