புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்து மண்ணில் இருக்கு….

First Published Dec 30, 2016, 1:52 PM IST
Highlights


அமெரிக்காவில் உள்ள இராக்பெல்லர் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியாவில் என ஜந்து கண்டங்களில் உள்ள கடற்கரை, மலைக்காடுகள் மற்றும் பாலைவனங்களில் 185 வகை மண் மாதிரிகளை சேகரித்து  ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த ஆய்வில் இதுவரை அறியப்படாத ஆண்டியாடிக் மற்றும் கேன்சரை குணப்படுத்தும் மருந்துகளை மண்ணிலிருக்கும் நுண்ணுயிரிகளிலிருந்தே கண்டுபிடிக்கலாம் என்பது தெரிய வந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இதையடுத்து குகைகள், வெப்ப நீருற்றுக்கள், தீவுகள் மற்றும் நகர பூங்காக்கள் போன்ற தனித்த சுற்றுச்சூழலில் உள்ள மாதிரிகளையும் சேகரிக்க விஞ்ஞானிகளின் முடிவு செய்துள்ளனர்.

அதில் பல மூலக்கூறுகள் புதிய மருந்துகள் உருவாக காரணமாக அமைந்தது என்று இராக்பெல்லர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர் சீன் பிராடி கூறியுள்ளார்.

click me!