உடலை ஆரோக்கியம் அடையச் செய்யும் “மூலிகை குடிநீர்”

 
Published : Oct 26, 2016, 04:35 AM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
உடலை ஆரோக்கியம் அடையச் செய்யும் “மூலிகை குடிநீர்”

சுருக்கம்

*ஒரு லிட்டர் தண்ணீரில் கையளவு ஆவரம்பூவை போட்டு சூடாக்கி வடிகட்டி குடித்துவந்தால் கை, கால் பாதங்களில் சேற்றுப்புண், நகச்சொத்தை, உடல் அரிப்பு போன்றவை குணமாகும்.!

* ஒரு லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு சிறிது சூடாக்கி வடிக்கட்டி குடித்து வந்தால் குடலிறைச்சல், வயிற்றுப்பூச்சி, அடிக்கடி வாய்வு பிரிதல், வயிற்றுவலி குணமாகும்.

* ஒருலிட்டர் தண்ணீரில் அரைதேக்கரண்டி சீரகம் போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அஜீரணக்கோளாறு,வயிற்று உப்புசம், உடல்சூடு தணியும்.!

* ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது சுக்கு,மிளகு, கொத்தமல்லியை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் அதிக சோர்வு, சளித்தொல்லை,முகத்தில் ஏற்படும் கருவளையம்,தொண்டைக்கட்டு குணமாகும்.!

* ஒருலிட்டர் தண்ணீரில் ஒரு கடுக்காயை தட்டிப்போட்டு சூடாக்கி குடித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.!

* ஒருலிட்டர் தண்ணீரில் நாவப்பழக் கொட்டைகளை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அதிக சக்கரை குறையும்.!

* ஒருலிட்டர் தண்ணீரில் 10 கிராம் பால்காயத்தை தட்டிப்போட்டு சூடாக்காமல் 2 மணி நேரம் அப்படியே ஊறவைத்து பிறகு குடித்து வந்தால் வாய்வுபிடிப்பு, ஏப்பம், மூட்டுவலி குணப்படும்.!

* ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, இந்துப்பு போன்றவற்றை கலந்து வடிகட்டி அப்படியே குடித்துவந்தால் உடல்சோர்வு, அதிகதாகம் அடங்கும்.!

* ஒருலிட்டர் தண்ணீரில் அரைமூடி எலுமிச்சைப்பழம், தேன், சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும் உடலில் உள்ள நாள்ப்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும்.!

இதுபோன்ற இன்னும் பலவித மூலிகை நீர் சிகிட்சை உண்டு. ஒருவர் தொடர்ந்து ஒரேவிதமான நீர்சிகிட்சையை செய்யக்கூடாது. ஒருலிட்டர் என்பது ஒரு அளவீடுதான் நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் தேவைப்படுமோ அவ்வளவு நீரையுமே இந்த முறையில் தயாரித்து குடித்து வந்தாலும் மிகவும் நல்லதுதான். ஒருமுறை தயாரித்த நீரை அதிகப்பட்சம் 9 மணிநேரம் வரையில் மட்டுமே பயன்படுத்தலாம்.

 

PREV
click me!

Recommended Stories

Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!
Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க