நோய்கள் உருவாக அடிப்படை “கழிவுகளின் தேக்கம்”…

 
Published : Oct 26, 2016, 04:31 AM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
நோய்கள் உருவாக அடிப்படை “கழிவுகளின் தேக்கம்”…

சுருக்கம்

மலம், சிறுநீர், காற்று, வியர்வை மூலமாக கழிவுகள் தினம்தோறும் வெளியேறுகிறது. இவற்றை நாம் தடுத்து நிறுத்துகிறோமா? இல்லை. இவை நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் நாம் இவற்றை நிறுத்த முயற்சி செய்வதில்லை.

ஆனால் எப்போதாவது வயிற்றுப்போக்கு ஏற்படும்போது என்ன செய்கிறோம்? இரண்டு மூன்று தடவை வயிற்றுப்போக்கு வந்ததும் அதை நிறுத்துகிறேன் பேர்வழி என்று உடனே மருந்துகளைச் சாப்பிட்டு வறிற்றுப்போக்கு அல்லது பேதியை நிறுத்திவிடுகிறோம். உடலில் கழிவுகள் தேங்கியுள்ளது, அந்த கழிவுகள் உடலில் தேங்கினால் பல்வேறு நோய்களை உருவாக்கும். அதனால் உடலானது பேதி என்ற ஒரு செயல் மூலம் கழிவை வெளியேற்றுகிறது என்பதை புரிந்துகொள்ளாமல் மருந்துகள் மூலம் அந்த கழிவுகளை உள்ளேயே வைத்து அடைத்துவிடுகிறோம்.

கொஞ்சம் நாட்கள் கழித்து தொடர்ந்து வாந்தி வருகிறது. இப்போது நாம் என்ன செய்கிறோம்? மீண்டும் கிசிச்சை என்ற பெயரில் இந்த கழிவுகளை வெளியேற்ற விடாமல் நிறுத்தி விடுகிறோம். நன்மை பயக்கும் எந்த ஒரு சக்தியையும் உடலானது வெளியேற்றாது. கெட்டவற்றை (கழிவுகளை) மட்டுமே உடலானது வெளியேற்றும் என்பதை நாம் இப்போதும் புரிந்து கொள்வதில்லை. முதலில் வந்த பேதிதான் இப்போது வாந்தியா மாற்றம் அடைந்திருக்கிறது என்பதை உணராமல் அது வேறு இது வேறு என்று நாம் தப்புக் கணக்கு போட்டுவிடுகிறோம்.

பேதியாகவும், வாந்தியாகவும் வந்தவற்றை வெறியேற விடாமல் செய்யும் போது அவை உடலிலேயே தேக்கம் கொள்கிறது. தேங்கிய கழிவுகள் கொஞ்சம் நாட்களில் சளியாக வெளியேற தொடங்குகிறது. இப்போது உடனடியாக சளியை வெளியேற விடாமல் நிறுத்த (சளி மருந்துகள் சாப்பிட்டு) எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துவிடுகிறோம்.

தினந்தோறும் வெளியேற முடியாமல் தேங்கும் கழிவுகள் பேதியில் வெளியேற முயலும் போது அதை வெளியேற விடுவதில்லை. பின்னர், வாந்தியாக வெளியே முயலும் போது அதை வெறியேற விடுவதில்லை. பின்னர், சளியாக வெளியேற முயலும் போது அப்போதும் வெளியேற விடுவதில்லை.

இப்போது அந்த கழிவுகள் காய்ச்சல் மூலமாக வெளியேற தடாலடியாக முடிவெடுக்கும். அனல்பறக்கும் காய்ச்சலில் இந்த கழிவுகள் எரிந்து சாம்பலாக முயற்சிசெய்யும் போது நாம் காய்ச்சல் மருந்துகள் முலம் காய்ச்சலை குறைத்து விடுகிறோம். எந்த வழியிலும் வெளியேற முடியாத கழிவுகள் உடலின் ஒவ்வொரு அணுவிலும் தேக்கம் கொள்கிறது. அந்த கழிவுகள் வெளியேற ஒவ்வொரு முறை முயற்சிக்கும் போதும் நாம் மருந்துகள் மூலம் அவற்றை வெளியேற விடுவதில்லை. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நோயாக நினைத்து அவற்றுக்கு மருத்துவம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இவையெல்லாம் வேறு வேறு நோய்கள் அல்ல. உடலில் தோன்றுவது ஒரே நோய் தான். அதாவது கழிவுகளின் தேக்கம்தான். எந்தெந்த உறுப்புகளில் இந்தக் கழிவுகள் தேக்கம் கொள்கிறதோ அந்தந்த உறுப்புகளில் நோயாக நமக்கு தோற்றம் தருகிறது.

நுரையீரலில் தங்கினால் அது சளி, ஆஸ்துமா என்று சொல்கிறோம். இதயத்தில் இரத்த நாளங்களில் வெளிப்பட்டால் இதயநோய்கள், மாரடைப்பு, கொழுப்புக்கட்டி அடைப்பு என்று என்னென்னவோ பெயர் வைக்கிறோம். கற்பப்பையில் வந்தால் ஃபிப்ராய்டு, நீர்க்கட்டி என்கிறோம். சிறுநீரகத்தில் அதே கழிவு தேங்கும் போது சிறுநீரக கற்கள் என்கிறோம். நோய் என்பது ஒன்றே ஒன்றுதான், அதன் வெளிப்பாடுதான் வேறுவேறாக இருக்கிறது. உச்சந்தலை முதல் உள்ளங்கால வரை உங்களுக்கு எந்த நோய் வந்தாலும் அது கழிவுகளின் தேக்கம்தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

தசாவதாரத்தில் கமல் பத்து வேட்டங்களில் நடத்து இருப்பார். அதனால், நாம் பத்து கமல் நடத்தார் என்று சொல்வதில்லை. ஒரு கமல் பத்து வேடம் என்று தானே சொல்கிறோம். அதேபோல தான், கழிவுகளின் தேக்கம் மட்டுமே பல்வேறூ வியாதிகளாக உருவெடுக்கிறது.

நோய் என்பது ஒன்றுதான். அவை வெளியேறும் விதம்தான் வேறு வேறாக உள்ளது. ஒரே கழிவுதான் பல்வேறு விதமாக வெளியேற முயற்சி செய்கிறத- என்பதை நாம் புரிந்துகொண்டால் கழிவுகள் வெளியேறுவதை தடுத்துநிறுத்தும் வேலையை செய்ய மாட்டோம்.

உடலானது கழிவுகளை வெளியேற்றும்போது அதை மருந்துகள் மூலம் நிறுத்தாமல் இருந்தாலேபோதும் கழிவுகள் வெளியேறியதும் நோய் நீங்கி ஆரோக்யம் பெற்றுவிடுவோம்.

முதலில் பேதியை நிறுத்தி, பின்னர் வாந்தியை நிறுத்தி, சளியை நிறுத்தி, அதன்பின்னர் காய்ச்சலை நிறுத்தி பின்னர் இந்த கழிவுகள் வெளியே வழிதெரியாமல் கட்டியாக, புண்களாக, வீக்கமாக, வலியாக தீராத நோயாக அந்தந்த உறுப்புகளை நாசம்செய்ய தொடங்கும் தீராத நோய்களில் சொந்தக்காரர்களாகி விடுகிறீர்கள்.

நோய்கள் உருவாக அடிப்படை காரணம் கழிவுகளின் தேக்கமும் அதனால் உடலின் சக்தி மாற்றத்தில் ஏற்படும் குறைபாடே ஆகும். உங்கள் உடலில் வருடக்கணக்கில் சேர்ந்துள்ள கழிவுகளை நீக்க மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் தொடுசிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தின் கதவுகளை திறக்க இது ஒன்றே போதுமே!

 

PREV
click me!

Recommended Stories

Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!
Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க