பரங்கிக்காயில் இருக்கும் மகத்துவங்களை அடைய அதனை இப்படி சாப்பிடணும்...

 
Published : Jan 25, 2018, 01:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
பரங்கிக்காயில் இருக்கும் மகத்துவங்களை அடைய அதனை இப்படி சாப்பிடணும்...

சுருக்கம்

To achieve the magnificent beauty of pumpkin it will eat it like this ..

பொதுவாக பழங்கள் என்பது நம் ஆரோக்கியத்தில் அதிக பங்கை வகிக்கின்றன. பழங்களில் பல வகை இருந்தாலும் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது பரங்கிக்காய் மட்டுமே. இது இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று சொல்கிறோம்.

பரங்கிக்காயில் சத்துகள்

பரங்கிக்காயில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் “ஈ”, வைட்டமின் “பி” மற்றும் இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம், நியாஸின், ஃபோலிக் அமிலம், கொழுப்பற்ற அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளன.

பரங்கிக்காயின் மகத்துவங்கள்

** பித்தம் போகும், பசியை தூண்டும், சிறுநீர் பெருகும், இது வீரிய புஷ்டியை ஏற்படுத்துவதுடன் மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது.

** மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.

** உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து ரத்த சுரத்தலுக்கு வழிவகுக்கும்.

** பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றுப் பையில் காணப்படும் பொருமல் வாய்வு, குன்மம், வறட்சி முதலிய குறைகள் நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும்.

** பரங்கிக்காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும்.

1.. பரங்கிக்காய் சூப்

** பரங்கிக்காயை தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். இதோடு வெங்காயம் மற்றும் பூண்டை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.

** வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி மற்றும் பரங்கிக்காயை சேர்த்து போட்டு வதக்கவும்.

** நன்றாக வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும். நன்கு வெந்ததும் இறக்கி ஆற வைத்து அரைத்து கொள்ள‌வும்.

** பிறகு அரைத்ததை வேறு பாத்திரத்தில் போட்டு பால் ஊற்றி கொதிக்க வைத்து மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி தூவினால் ஆரோக்கியமான “பரங்கிக்காய் சூப்” தயார்.

பயன்கள்

** இதை வாரம் இரு முறை சாப்பிட்டு வந்தால் நீர்ப்பை கோளாறுகள் மற்றும் குடல் புழுக்கள் நீங்கும்.

** வாத நோய், தீக்காயங்கள் சிறுநீரக வீக்கம் மற்றும் சிறுநீர் எரிச்சல் ஆகிய கோளாறுகளை இந்த சூப் குறைக்க வல்லது.

PREV
click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
Skin Damaging Foods : முகப்பருக்களே இல்லாத சருமத்திற்கு இதுதான் ஒரே வழி! இந்த 7 உணவுகளை உடனே நிறுத்துங்க