உங்கள் சருமத்தை பளிச்சென்று மாற்ற பக்க விளைவு இல்லாத ஐந்து எளிய டிப்ஸ்...

Asianet News Tamil  
Published : Jan 25, 2018, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
உங்கள் சருமத்தை பளிச்சென்று மாற்ற பக்க விளைவு இல்லாத ஐந்து எளிய டிப்ஸ்...

சுருக்கம்

Five simple tips that do not have a side effect to shine your skin ...

உங்கள் சருமத்தை பளிச்சென்று மாற்ற பக்க விளைவு இல்லாத ஐந்து எளிய டிப்ஸ்:

1. பாதாம் எண்ணெய்: 

உலர்ந்த சருமத்திற்கு பாதாம் எண்ணெய் தேய்த்து வந்தால் நல்லது. பருக்கள் குழி அடையாளங்களையும் பாதாம் ஆயில் நாளடைவில் நீக்கிவிடும். ஆயில் கிடைக்காவிடில் பாதாமின் தோலுடன் 3 – 5 எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்து தினமும் முகத்தில் தேய்க்கலாம்.

2. பச்சை நிற ஆப்பிள்: 

பச்சை நிற ஆப்பிளின் சாறு தோல் சுருக்கம், அரிப்பு, வெடிப்பு அனைத்திற்கும் மிக நல்லது.

3. தேன்: 

தேனில் பால், தயிர், அரைத்த எள்ளு எல்லாம் சரிசமமாக கலந்து தேய்த்து வந்தால் முகம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் ஆகும்.

4. கடலை எண்ணெய்: 

1 தேக்கரண்டி கடலெண்ணெயில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வந்தால் பரு, கரும்புள்ளிகள் வரவே வராது.

5. மஞ்சள்:

கண்களுக்கு கீழே கருவட்டத்தை நீக்க மஞ்சளில் அன்னாசி சாறு சேர்த்து தேய்த்து வந்தால் பரு, கரும்புள்ளிகள் நீங்கும். முகம் பளிச்சென்றும் இருக்கும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake