
தேவையான பொருட்கள்:
சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சீரகம், ஏலம், வால்மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், ஜாதிபத்ரி - தலா 10கிராம்.
கற்கண்டு -700கிராம்.
பசும்பால்- 700மி.லி.
நெய்-175கிராம்
தேன்-175 கிராம்
செய்முறை:
1. சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சீரகம், ஏலம், வால்மிளகு, கிராம்பு, ஜாதிக்காய்,
ஜாதிபத்ரி ஆகியவற்றை இளம் சூட்டில் வறுத்து சூரணம் செய்து கொள்ளவும்.
2. சீனா கற்கண்டை பசுவின் பாலில் போட்டு பாகு செய்து வைத்துக் கொள்ளவும்.
3. சூரணங்களை பாகில் தூவிக் கிண்டி பின் நெய் விட்டு நன்றாகக் கிளறிக் கொடுத்து கீழே இறக்கி வைக்கவும்.
4. சுத்தமான தேன் விட்டுக் கிளறி ஜாடியில் பத்திரப்படுத்தவும்.
தினசரி ஒரு வேளைக்கு நெல்லிக்காய் அளவு என காலை மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்குவதோடு வயிறு மந்தம், அஜீரணம் இவைகளும் நீங்கும்.
நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.