முதுமையை விரட்டும் கொய்யா…

 
Published : Oct 20, 2016, 04:22 AM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
முதுமையை விரட்டும் கொய்யா…

சுருக்கம்

பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி சாப்பிடக்கூடியது கொய்யாப் பழம்.

இதில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது.

வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துகளும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் கொய்யா பழத்தில் நிறைந்துள்ளது.

கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். இம்மரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும்.

காய்ச்சலைப் போக்கும். வேர்ப்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும்.

கொய்யாப்பழத்தை அரிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் படும்படி நன்றாக மென்று தின்பதே நல்லது. இதன்மூலம் பற்களும், ஈறுகளும் பலப்படும். வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் உள்ளது. எனவே, வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும். கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலுடன் சாப்பிட வேண்டும்.

முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது. மதுபோதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம். உணவு சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல.

சாப்பிட்ட பின்போ அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிட்டால் நல்லது. நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல், தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் நோய் அதிகமாகும். ஒரு சிலருக்கு மயக்கம் ஏற்படும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடவே கூடாது. மற்றவர்கள் கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடாமல் இருப்பது சிறந்தது. இரவில் சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.

PREV
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!