ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது கீழே விழுவதுபோல தோன்றுவதற்கு இதுதான் காரணம்...

First Published Feb 23, 2018, 1:28 PM IST
Highlights
This is the reason why you feel like falling down in deep sleep ...


ஆழ்ந்த தூக்கத்தில் இருந்திருப்பீர்கள், திடீரென உங்களுக்கே தெரியாமல் ஏதோ  நூறடி உயரத்தில் இருந்து கீழே விழுவது போல உணர்ந்திருப்பீர்கள். உடனே உறக்கத்தில் இருந்து எழுந்திரு உட்கார்ந்து மண்டையை பிய்த்துக் கொண்டிருப்பீர்கள்.

இது ஏன் உண்டாகிறது என என்றாவது யோசித்திருக்கிறீர்களா? நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நமது மூளை, கனவுக்கு இடையேயான ஹார்மோன் இணைப்பில் ஏற்படும் தாக்கத்தினால் தான் இது உருவாகிறது.

** ஹைப்நிக் ஜர்க்

உறங்கிக் கொண்டிருக்கும் போது ஏற்படும் தொல்லைகளை தான் ஹைப்நிக் ஜர்க் (Hypnic Jerk) என குறிப்பிடுகிறார்கள். இதை Hypnagogic jerk அல்லது Sleep Start என்றும் கூட கூறுகிறார்கள்.

** காரணம்

இதற்கான காரணம் இதுதான் என இன்று வரை யாரும் ஊர்ஜிதமாக கூறியதில்லை என உளவியலாளர் டாம் ஸ்டாஃபோர்ட் கூறுகிறார். மேலும், "உறக்கத்தில் இருந்து எழும் நிலை மற்றும் கனவு நிலைகளுக்கு மத்தியில் உண்டாகும் கூரான போருக்கு மத்தியில் ஏற்படும் தாக்கம் என இதை கூறலாம்" என்றும் டாம் கூறியுள்ளார்.

** மூளை மற்றும் உடல்

நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது உடல் பாரளைஸ் நிலைக்கு சென்றுவிடும். அப்போது ஆர்.ஈ.எம் எனப்படும் Rapid Eye Movement-க்குள் நீங்கள் செல்லும் போது தான் கனவுகள் தோன்றுகின்றன.

இந்த ஆழ்ந்த தூக்க நிலையில் இருக்கும் உடல் மூளையை தாண்டி செயல்படும் போது நீங்கள் திடீரென விழுவது போன்ற உணர்வுடன் எழுவது அல்லது உங்களுக்கே தெரியாமல் திடீரென விழிப்பது போன்ற நிகழ்வுகள் உண்டாகின்றன.

** தசை இழுப்பு

நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது உங்கள் தசைகளில் இழுப்பு ஏற்படும். இதை ஆங்கிலத்தில் "myoclonus" என கூறுகிறார்கள். விக்கல் வருவது கூட இந்த வகையை சேர்ந்தது தான் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

** மர்மம்

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கீழே விழுவது போன்ற உணர்வு இன்று வரையும் தெளிவான, முழுமையான விடை கிடைக்காத மர்மமாக தான் இருக்கிறது. இதை சார்ந்து நிறைய தியரிகளும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

** பதட்டம்

பதட்டம் மற்றும் உறக்கமின்மை தான் இதற்கான முக்கிய / அதிகப்படியான காரணியாக இருக்கிறது என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அடிக்கடி இப்படி ஏற்பட்டால் உங்களுக்கு பதட்டம், மன அழுத்தம் நிறைய இருக்கிறது என்பதை இது வெளிக்காட்டுகிறது என்று அர்த்தம்.

** உறக்கம்

அதிகப்படியான வேலை, வேலை பளு, மன அழுத்தம் இருந்தால் நள்ளிரவு வரை வேலை செய்வதை தவிர்த்து, முதலில் நன்கு உறங்குங்கள். நல்ல உறக்கமே இதற்கான நற்மருந்தாகும்.

click me!