ஆண்,பெண் இருவருக்கும் முகத்தில் கரும்புள்ளிகள் வருவதற்கு இதெல்லாம்தான் காரணம்...

 
Published : Feb 13, 2018, 01:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
ஆண்,பெண் இருவருக்கும் முகத்தில் கரும்புள்ளிகள் வருவதற்கு இதெல்லாம்தான் காரணம்...

சுருக்கம்

This is the reason why men and women get black spot on the face ..

சிலருக்கு மூக்கைச் சுற்றி சொரசொரப்பாகவும், சிறு புள்ளிகளாகவும் இருக்கும். இதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? 

நாம் அன்றாடம் செய்யும் சிறு தவறுகள்தான் இதற்கு காரணம். 

கரும்புள்ளிகளைப் போக்குவதற்கான வழிகளைத் தேடுவதற்கு பதிலாக, அது எதற்கு வருகிறது என்பதைத் தெரிந்து கொண்டால், கரும்புள்ளிகள் வருவதையே தடுக்கலாம் அல்லவா!

கரும்புள்ளிகள் வருவதற்கான சில காரணங்கள் இதோ... 

** குளித்து முடித்த பின் முகம் கழுவாமல் இருப்பது தலைக்கு குளித்து முடித்த பின், இறுதியில் பலர் நீரால் தனியாக முகத்தைக் கழுவமாட்டார்கள். இப்படி கழுவாமல் இருப்பதால், கண்டிஷனர் அல்லது ஷாம்புகள் சருமத்துளைகளில் அடைப்புக்களை ஏற்படுத்தி, பின் கரும்புள்ளிகளை வரவழைக்கிறது. எனவே கரும்புள்ளிகள் வராமல் இருக்க வேண்டுமானால், குளித்து முடித்த பின் இறுதியில் நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

** அழுக்கு தலையணை உறை தலையணை உறையை பல வாரங்களாக் பயன்படுத்தி வந்தால், அதனால் முகத்தில் அழுக்குகளின் தேக்கம் மேன்மேலும் தான் அதிகரிக்கும். எனவே மூன்று நாட்களுக்கு ஒருமுறை தவறாமல் தலையணை உறையை மாற்றுங்கள்.

** தலைமுடி பராமரிப்பு பொருட்கள் தலைமுடி பராமரிப்பு பொருட்களை உங்களின் முடியை மென்மையாக பட்டுப் போன்று காட்டலாம். ஆனால் அதனை அதிகம் பயன்படுத்தினால், முகத்தில் பருக்கள் வரும் என்பது தெரியுமா? அதிலும் தலைமுடிக்கு செரம் அல்லது ஜெல்களைப் பயன்படுத்தினால், முடி முகத்தில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் முகத்தில் கையை வைக்கும் முன் கைகளை நன்கு நீரில் கழுவுங்கள்.

** போர் நீர் போர் நீரில் தாதுஉப்புக்கள் அதிகம் இருக்கும். போர் நீரால் முகத்தை அதிகமாக கழுவும் போது, அது சருமத்துளைகளை அடைத்து, கரும்புள்ளிகளுக்கு வழிவகுக்கும். எனவே போர் நீரைக் கொண்டு முகத்தை அதிகம் கழுவாதீர்கள். முடிந்த வரை நீரை நன்கு சுத்திகரித்து பின் அந்நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

** மேக்கப்புடன் உடற்பயிற்சி செய்வது உடற்பயிற்சி செய்யும் போது முகத்தில் மேக்கப் இருந்தால், முதலில் அதனை நீக்குங்கள். ஏனெனில் உடற்பயிற்சியின் போது வியர்வை வெளியேறுவதால், அப்போது முகத்தில் மேக்கப் இருப்பின், சருமத்துளைகள் அடைபட்டு, நாளடைவில் அது கரும்புள்ளிகளை மட்டுமின்றி, முகப்பருக்களையும் உண்டாக்கும். எனவே எப்போதும் உடற்பயிற்சியின் போது மேக்கப் போடாதீர்கள்.

** எண்ணெய் பசை மேக்கப் முகத்திற்கு எண்ணெய் பசை மேக்கப்பைப் போட்டு, தினமும் முகத்தை சரியாக கழுவாமல் இருந்தால், அதனால் கரும்புள்ளிகள் வரக்கூடும்.

** மேலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கும், கரும்புள்ளிகள் அதிகம் வரும். இவர்கள் வாரத்திற்கு 3-4 முறை முகத்தை ஸ்கரப் செய்து வந்தால், சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

PREV
click me!

Recommended Stories

Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்
Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி