
மூட்டுவலி
பொதுவாக மூட்டுவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அதில் மலச்சிக்கல் மற்றும் வாய்வு பிரச்சனை ஒரு காரணமாக உள்ளது.
மூட்டுவலியைக் குணப்படுத்தும் சித்த மருத்துவ மருந்துகள் இதோ...
மருந்து 1:
ஒரு முடக்கத்தான் கீரை இலை -2 கைபிடி அளவு எடுத்து இதனுடன் பூண்டு -2 பல்,மிளகு ,சீரகம் சிறிது,தக்காளி ஒன்று,தண்ணீர் -2-டம்ளர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து சாப்பிடவும்.
இது போல் வாரம் மூன்று முறை சாப்பிட்டு வர ஆரம்ப நிலையில் உள்ள மூட்டு வலி எளிதில் குணமாகும்.
மருந்து 2 :
வாயு சூரணம் :
சுக்கு -50 -கிராம்
மிளகு -50 -கிராம்
திப்பிலி -50 -கிராம்
சீரகம் -50 -கிராம்
ஏல அரிசி -25-கிராம்
இவைகளை லேசாக வறுத்து இடித்து பொடி செய்து கொள்ளவும். இதில் காலை, மாலை -உணவிற்கு முன் கால் டீஸ்பூன் அளவு எடுத்து வாயிலிட்டு வெந்நீர் சாப்பிடவும்.
உடலில் சகல வாயுப் பிரச்சனைகளும் தீரும்.பசி நன்கு எடுக்கும்.மூட்டு வலி ,குதிக்கால் வலி தீரும்.