கரித்தூளை இப்படி பயன்படுத்தினால் உங்கள் சருமம் பளபளவென மின்னும்...

Asianet News Tamil  
Published : Feb 13, 2018, 01:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
கரித்தூளை இப்படி பயன்படுத்தினால் உங்கள் சருமம் பளபளவென மின்னும்...

சுருக்கம்

If you use charcoal your skin will shine brightly ...

நீங்களும் எவ்வளவோ அழகுக் குறிப்புகளை உபயோகித்து இருப்பீர்கள். பயன் கொஞ்சமாக தான் கிடைத்து இருக்கும்.  சில குறிப்புகள் உங்களுக்கு பலனளிக்காமல் போகலாம். இதற்காக அந்த குறிப்பு தவறானது என நினைக்கக் கூடாது. அது உங்கள் சருமத்திற்கு ஏற்றதல்ல என்பதுதான் உண்மை. 

ஒவ்வொருவரின் சருமத்திற்கும் ஏற்றவாறு சில அழகுக் குறிப்புகள் பலனளிக்கும். உங்கள் சருமம் வறண்ட சருமமாக இருந்தால் எந்த வித ஃபேஸியல் மாஸ்க்கையும் 10- 15 நிமிடங்களுக்கு மேல் உபயோகிக்க கூடாது. இது மேலும் வறட்சியை அளித்து விடும். பலனும் தராது. 

அதேபோல் எலுமிச்சை, பப்பாளி ஆகியவற்றை நேரடியாகவோ அடிக்கடியோ உபயோகிக்கக் கூடாது. அதிகமாக முகம் கழுவக் கூடாது.

எண்ணெய் சருமமாக இருந்தால் 20 நிமிடங்களுக்கும் ஃபேஸியல் மாஸ்க்கை உபயோகிக்கலாம். கூடுதல் பலனளிக்கும். 

எலுமிச்சை, பப்பாளி ஆகியவற்றை அடிக்கடி உபயோகிக்க வேண்டும். அடிக்கடி முகம் கழுவுதல் அவசியம். இப்படி சருமத்திற்கு ஏற்றவாறுதான் அழகுக் குறிப்பை பயனபடுத்த வேண்டும்.

கரும்புள்ளி, மாசு, பரு, மரு ஆகியவை அழகை குறைப்பது மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் குறைக்கும் செயல்கள்தான். இவைகளில் ஆரோக்கியமற்ற சருமத்தின் வெளிப்பாடுகள்.

இதனை போக்கும் விதமாக அழகுத் துறையில் உபயோகப்படுத்துவது கரித்துண்டாகும். வினைப்படுத்தப்பட்ட கரித்துண்டுகள் (Activated charcoal ) கடைகளில் கிடைக்கும். 

அவை, சரும துவாரத்திலுள்ள அழுக்குகளை நீக்குவதோடு, சருமத்தை மின்னச் செய்யும். அதனை கொண்டு எப்படி உங்கள் சருமத்தை மெருகூட்டலாம் என பார்க்கலாம்? 

தேவையானவை 

வினையூட்டிய கரித்தூள் – ஒரு கேப்ஸ்யூல் 

பச்சை க்ளே – 1 டேபிள் ஸ்பூன் 

வாசனை எண்ணெய் – சில துளிகள்

செய்முறை

பச்சை க்ளே அல்லது முல்தானி மட்டி போன்ற ஏதாவது ஒரு களி மண் வகையை எடுத்துக் கொள்ளலாம். 

கேப்ஸ்யூலிலிருந்து கரித்தூளை எடுத்து அதனுடன் பச்சை க்ளே வையும் , பாதாம் போன்ற ஏதாவது ஒரு வாசனை எண்ணெயையும் கலந்து முகத்தில் தடவுங்கள்.

15 நிமிடங்களில் முகம் இறுகுவதை போல் உணர்வீர்கள். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். 

இது போல் வாரம் ஒருமுறை உபயோகித்தால், தொய்வ்டைந்த சருமம் இறுகி, அழுக்குகள் களைந்து பளிச்சென்ற சருமம் கிடைக்கும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake