எளிய மருத்துவத்தில் முதன்மையான இலை…

 
Published : Jan 10, 2017, 12:37 PM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
எளிய மருத்துவத்தில் முதன்மையான இலை…

சுருக்கம்

வெற்றிலையின் இலைகள் இதயவடிவில் பெரிதாக இருப்பதோடு நுனி கூர்மையாகவும் இருக்கும்.

பயன்கள்:

** சீதளம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும்.

** வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடன் நீர் கலந்த பாலை தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.

** வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.

** குழந்தைகளுக்கு வரும் சுரம், வெற்றிலைச் சாற்றில் கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கலந்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.

** வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.

** குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.

** வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது.

** வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் காது வலி குணமாகும்.

** வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும்.

PREV
click me!

Recommended Stories

Uric Acid Mistakes : மூட்டுகளை பாதிக்கும் 'யூரிக் அமிலம்' அதிகரிக்க இந்த தவறுகள் தான் காரணம்.. உடனே நிறுத்துங்க
Blood Clot : இரத்தக் கட்டை வலியில்லாமல் 'குணமாக்கும்' சூப்பரான வீட்டு வைத்தியங்கள்!! ட்ரை பண்ணி பாருங்க