இந்த மலருக்கு இருதய நோயைக் குணப்படுத்தும் திறன் இருக்கிறது…

 
Published : Mar 01, 2017, 01:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
இந்த மலருக்கு இருதய நோயைக் குணப்படுத்தும் திறன் இருக்கிறது…

சுருக்கம்

This flower is effective in treating cardiovascular disease ...

தாமரை:

செந்தாமரை, வெண்தாமரை என தாமரையில் பல வகைகள் உண்டு.

தாமரையை அதன் அழகு மலர்களுக்காக மட்டுமே மக்கள் விரும்புகின்றனர். அதன் மருத்துவ பயன் பலருக்கு தெரியாது.

தாமரையின் மலர்கள் தான் பெரும்பாலும் மருத்துவத்தில் அதிகமாக பயன்படுகிறது.

தாமரை மலரின் பொதுக்குணம் உடல் சூட்டை தணிப்பது தான். மற்றும் இரத்த நாளத்தையும் இது ஒழுங்குபடுத்தும் இயல்புடையது.

வெண்தாமரை மலரைவிடச் செந்தாமரை மலருக்கு அதிகப்படியான மருத்துவச் சிறப்புகள் உண்டு.

இது இதய நோய்க்கு நல்ல மருத்துவப் பொருளாகப் பயன்படுகிறது.

செந்தாமரை மலரை நிழலில் உலர்த்தி ஒரு கிலோ அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு மண்பாண்டத்தில் ஆறு லிட்டர் அளவுக்குச் சுத்தமான நீர்விட்டு ஓர் இரவு முழுவதும் ஊறிக்கொண்டிருக்கச் செய்ய வேண்டும்.

மறுநாள் நன்றாக காய்ச்சி வடிகட்டி கண்ணாடி போன்ற பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த நீரில் ஓரு அவுன்ஸ் அளவு எடுத்து அத்துடன் சிறிதளவு தேன் சேர்த்து நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் படிப்படியாக குறைந்து முற்றுமாக அகன்று விடும். உடலின் உள்புண்களுக்கும் வெளிப்புண்களுக்கும் இது சிறந்த மருந்தாக உபயோகப்படும்.

வறட்சி காரணமாகத் தோன்றும் இருமலுக்கும் இது நல்லது.

பித்த தலைவலியையும் இது அகற்றும். இதனை நாள்பட சாப்பிட வேண்டும். இரண்டொரு வேளையோடு நிறுத்திக்கொண்டால் முழுக்குணம் தெரியாது.

வெண்தாமரைப்பூக்களைப் காயப்போட்டு பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். தினசரி 5 டீஸ்பூன் பொடியை ஒன்றரை டம்ளர் நீரில் போட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சவேண்டும். அதனை வடிகட்டி பால், சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு தடவை சாப்பிட உயர் ரத்த அழுத்தம் சீராகும்.

செந்தாமரை இதழ்களை எடுத்து வெயிலில் உலர்த்தி 300 கிராம் எடை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மூன்று லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் ஊற்றி மூடிவைத்து விடவும்.

இந்த கஷாயத்தை தினமும் அரை டம்ளர் அளவு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டியளவு தேன்விட்டு 21 நாட்களுக்கு குடித்து வர இருதய நோய் குணமடையும்.

PREV
click me!

Recommended Stories

Aloe Vera For Dandruff : பொடுகை நிரந்தரமாக நீக்க 'கற்றாழை' ஜெல்லை இந்த 1 பொருளுடன் கலந்து யூஸ் பண்ணுங்க
Holding in Gas : வாயுவை அடக்கி வைக்கும் நபரா? அடிக்கடி அடக்கினால் 'உடம்புக்கு' என்னாகும் தெரியுமா?