தோள்பட்டை, கழுத்து வலியை போக்க வீட்டிலேயே செய்யலாம் எளிய உடற்பயிற்சி

First Published Feb 28, 2017, 1:50 PM IST
Highlights
exercises for neck and shoulder pain


கம்ப்யூட்டரில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு நாளடைவில் கழுத்து தசை பாதிக்கப்படும். அந்த இடத்தில் போதிய ரத்த ஓட்டம் இருக்காது. இதனால் கழுத்து மற்றும் கை, கால் பகுதிகளில் வலி ஏற்பட்டு கழுத்து பகுதியை அசைக்க கூட முடியாமல் போகலாம்.

கழுத்து பகுதிக்கு வலு சேர்க்கும் எளிய பயிற்சிகள் உள்ளன. இவற்றை தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து வலி பிரச்சனையே இருக்காது.

மேலே, கீழே

தரையில் நேராக நின்று கழுத்தை மட்டும் மேலும் கீழும் அசைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 20 நொடிகள் செய்ய வேண்டும்.

இடது, வலது

தரையில் நேராக நின்று கொண்டு கழுத்தை வலது புறம் திருப்பி, பின் நோக்கி நேராக்கி அதன் பின் இடது புறம் திருப்ப வேண்டும். இப்படி 20 நொடிகள் செய்ய வேண்டும்.

கழுத்தை பின்பக்கம் சாய்த்தல்

கைகளை மோவாயில் வைத்தபடி கழுத்தை பின்னால் சாய்க்கவும். 20 நொடிகள் இந்த நிலையில் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.

கழுத்தை முன்பக்கம் குனியவைத்தல்

கைகளை பின்னந்தலையில் வைத்தபடி கழுத்தை முன்பக்கமாக குனியவும். இந்த நிலையில் 20 விநாடிகள் இருக்கவும். மேலே சொன்ன இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் விரையில் நல்ல பலனை காணலாம்.

இவ்வாறு செய்வதால் தோள்பட்டை தசைகள் வார்ம் அப் ஆகும். கழுத்து தசைகள் நன்றாக ஸ்ட்ரெச் ஆகும். இந்த பகுதிகளில் ரத்த ஓட்டமும், இந்த பகுதிகளில் ரத்த ஓட்டமும், வளைந்து கொடுக்கும் தன்மையும் அதிகரிக்கும்.

 

click me!