மலச்சிக்கலுக்கு மட்டுமே பயன்படுத்தும் வாழைப்பழத்தின் மற்ற மருத்துவ குணங்கள்…

 
Published : Feb 28, 2017, 01:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
மலச்சிக்கலுக்கு மட்டுமே பயன்படுத்தும் வாழைப்பழத்தின் மற்ற மருத்துவ குணங்கள்…

சுருக்கம்

medical uses of banana

எல்லா நேரத்திலும் விரும்பபக்கூடிய மற்றும் அனைவராலும் வாங்கக்கூடிய பழம். வாழைப்பழம் எல்லா நேரத்திலும் (வருடம் முழுவதும்) கிடைக்கக்கூடிய பழமாகும்.

இது பல நோய்களைக் குணமாக்கக்கூடிய தன்மையுடையது. இப்பழம் எல்லா மனிதர்களாலும் சுலபமாக வாங்கக்கூடியது மற்றும் அதிகளவில் கிடைக்கக்கூடியது.

அனைத்துவகை வாழைப்பழங்களும் ஏதோ ஒரு வகையில் பலனளிக்கக் கூடியவைகளாகும். வாழைப்பழம் போதுமான சக்தியினை அளிக்கின்றது.

இதில் அதிக நார்ச்த்து மற்றும் சுக்ரோஸ், ப்ரக்டோஸ், குளுக்கோஸ் போன்று இயற்கை சர்க்கரைப்பொருட்கள் உள்ளது. வாழைப்பழம் சில உடல்நலக்கோடுகள் ஏற்படுவதை தடுக்கிறது அல்லது அவற்றை மேற்கொள்ள உதவுகிறது.

மனஅழுத்தம்

வாழைப்பழத்தில் ஒருவகை புரதம் உள்ளது. நம் உடல் இப்புரதத்தினை செரடோனன் எனும் வேதிப்பொருளாக மாற்றுகிறது. இப்பொருள் மனதை தளர்வாகவும் சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

ப்ரிமென்ஸ்ட்ரூவல் சின்ட்ரோம் - (மாதவிடாய் முன் அளிகுறிகள்)

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரிப்படுத்துகிறது. இது ஒருவரின் மனநிலையினை மாற்றச் செயல்படுகிறது.

இரத்த சோகை

வாழைப்பழத்தில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. இது, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது இரத்தசோகை நோயை மேற்கொள்ள உதவியாக இருக்கிறது

இரத்த அழுத்தம்

வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் தாதுப் பொருளும் அதே வேளையில் குறைந்த உப்பும் உள்ளது. எனவே இரத்த அழுத்தத்தை குறைக்க இது தகுந்த உணவாகும்.

மூளைத்திறன்

பொட்டாசியம் அதிகமுள்ள பழங்கள் மக்கள் சுதாரிப்பாக இருக்கச் செய்து, அதிகளவில் கற்றுக்கொள்ள உதவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன

மலச்சிக்கல்

வாழைப்பழத்தில் உள்ள அதிக நார் சத்தானது மலச்சிக்கல் பிரச்சினையை மேற்கொள்ள உதவுகிறது மற்றும் சாதாரணமாக எவ்வித கஷ்டமுமின்றி மலம் கழிக்க உதவுகிறது.

நெஞ்செரிச்சல்

வாழைப்பழத்தில் இயற்கையாகவே நம் உடலில் உள்ள அமிலத்தை சமமாக்கும் தன்மை உள்ளது. இது நெஞ்செரிச்சலிலிருந்து நல்ல நிவாரணம் தர உதவுகிறது.

அல்சர் எனப்படும் வயிற்று மற்றும் குடல்புண்

வாழைப்பழம் மென்மையாகவும் வழுவழுப்பாகவும் இருப்பதால், இது குடலில் ஏற்படும் கோளாறு உள்ளவர்களுக்கும், நல்ல உணவாக பயன்படுகிறது. வாழைப்பழம் அதிக அமிலத்தன்மையைச் சரிசெய்வதோடு, புண் ஏற்பட்ட இடத்தில் ஒரு பாதுகாப்பு சுவரை ஏற்படுத்துகிறது.

ஸ்ட்ரோக்

வாழைப்பழத்தினை உணவில் ஒருபகுதியாக தவறாமல் எடுத்துக்கொள்வதினால் அதிகளவு (40 சதம்) ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்தினை தவிர்க்கிறது.

PREV
click me!

Recommended Stories

Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி
Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்