உடலைப் பொன்போல பளபளப்பாக்கும் “பொன்னாங்கண்ணி”…

Asianet News Tamil  
Published : Feb 28, 2017, 01:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
உடலைப் பொன்போல பளபளப்பாக்கும் “பொன்னாங்கண்ணி”…

சுருக்கம்

As the golden body Polisher

பொன்னாங்கண்ணியில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து, இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், சுண்ணாம்பு சத்துக்கள் வைட்டமின் - ஏ, சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

உடல் பொன்போல பளபளப்பாகும் என்பதால் இதற்கு பொன்னாங்கண்ணி என்ற பெயர் பெற்றது. கீரைகளின் ராணி என்று சொல்லத்தக்க கீரை பொன்னாங்கண்ணி. பலப் பல‌ மருத்துவக் குணங்களை கொண்டது.

மருத்துவப் பலன்கள்

1.. கண்பார்வைக்கு மிகவும் நல்லது.

2. சருமத்துக்கு மிகவும் நல்லது.

3. மூல நோய், மண்ணீரல் நோய்களை சரிப்படுத்தும் ஆற்றல் உடையது.

4. ரத்தத்தைச் சுத்தீகரிக்கும்

5. உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

6. வாய் துர்நாற்றத்தை நீக்கும்.

7. இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.

8. இக்கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம்- போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும்.

9. பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி நாட்டுப் பொன்னாங்கண்ணி இருவகை உண்டு. இதில் சீமை பொன்னாங்கண்ணி அழகுக்கு வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு.

10. பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணி தான் பல அருங்குணங்கள் கொண்டது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. பலவித நோய்களையும் தீர்க்கும் இந்தக் கீரையை பகலில் உண்பதுதான் நலன் தரும்.

 

PREV
click me!

Recommended Stories

இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!
இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!