முள்ளங்கி பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மருத்துவ பயன்கள்….

Asianet News Tamil  
Published : Feb 27, 2017, 01:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
முள்ளங்கி பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மருத்துவ பயன்கள்….

சுருக்கம்

medical benefits of radish

முள்ளங்கிக் கிழங்கை உலகம் முழுவதும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். முள்ளங்கி பல நோய்களை கட்டுப்படுத்துகிறது. அவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

சிறு நீரக கோளாறு நீங்க:

சிறு நீரக கோளாறு இருப்பவர்கள் தொடர்ந்து தினமும் ஒரு கப் முள்ளங்கி சாறு அருந்தி வந்தால் எரிச்சல் மற்றும் சிறு நீரக வியாதிகள் நீங்கும்.

நுரையீரல் தொற்றுக்கு:

இருமல், நெஞ்சு சம்பந்தமான நோய்கள் (இதயவலி) வயிற்று உப்புசம் தொண்டைப்புண், தொண்டைக்கட்டு முதலியவை குணமாக ஒரு தேக்கரண்டி முள்ளங்கிக் கிழங்குச் சாறுடன் அதே அளவு தேனையும் கலந்து சாப்பிட வேண்டும்.

சிறிது உப்பும் இதில் சேர்க்கப்படவேண்டும். தினசரி மூன்று வேளை இது போல் சாப்பிட்டால் மேற்கண்ட கோளாறுகள் குணமாகும். இது மிக உயர்தரமான நன்மையைத் தரும் மருத்துவ முறையாகும்.

சரும வியாதிகளுக்கு:

சரும வியாதிகளுக்கு மகத்துமான நன்மைகளை தருகிறது சரும வியாதிகள். படர்தாமரை நோய், முகத்தில் உள்ள கருப்புள்ளிகள், தேமல், மங்கு, எண்ணெய் வடிதல் ஆகியவற்றின் மீதும் முள்ளங்கி விதைப்பசையைத் தடவினால் குணமாகும்.

முள்ளங்கி விதையில் ஒரு வகையான பிளீச்சிங் பொருள் இருக்கிறது. அதுவே, தோல் தொடர்பான நோய்களையும் குணமாக்குகிறது.

குழந்தைகளுக்கு அறிவாற்றல் பெருக:

குழந்தைகள் மந்தபுத்தி இல்லாமல் சுறுசுறுப்பாய் இருந்து படிக்கவும், நன்கு உடலுறுதியுடன் வளரவும் முள்ளங்கிக் கிழங்குடன் முள்ளங்கிக்கீரையையும் அடிக்கடி உணவில் சேருங்கள். காரணம், கீரையில் பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.

முள்ளங்கியை சமைக்கலாமா?

முள்ளங்கியை வெள்ளரிக்காயைப் போல் பச்சையாகத்தான் சாப்பிட வேண்டும். வேக வைத்து சாப்பிட்டால் அதிலுள்ள விட்டமின் மற்றும் மினரல்கள் அழித்துவிடும்.

கேரட், வெள்ளரி ஆகியவற்றுடன் கலந்து சேலட் செய்து சாப்பிடுவதால் மிகவும் நன்மைகளைத் தரும்.

PREV
click me!

Recommended Stories

இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!
இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!