இந்த 10 கெட்ட பழக்கத்தால் தான் நமக்கு அதிக பாதிப்புகள் வருகின்றன…

Asianet News Tamil  
Published : Sep 19, 2017, 12:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
இந்த 10 கெட்ட பழக்கத்தால் தான் நமக்கு அதிக பாதிப்புகள் வருகின்றன…

சுருக்கம்

These 10 bad habits are the ones that have more harm to us ...

1.. நமக்கு நாமே

ஒரு வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும் என முடிவு செய்திருப்போம். ஆனால் அதை மறந்தால் அதற்கு நமக்கு நாமே காரணம் சொல்லிக்கொண்டு, எடுத்த செயலை அப்படியே விட்டுவிடுவோம். தினமும் அதிகாலை எழ வேண்டும் என்ற நம் புத்தாண்டு உறுதிமொழி போல. இப்படி நாம் காரணங்கள் சொல்லி கழட்டிவிட்ட காரியங்களே பெரிய தடை.

2.. ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது

இது பெரிய திறமை எனக் கருதி நம்மில் பலரும் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள் செய்வதுண்டு. ஆனால் அறிவியல் ஆராய்ச்சியின்படி 2% மக்களே இந்த மல்டி டாஸ்க்கிங்கில் சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது. மற்றவர்கள் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என அநாவசிய சாகசங்களைக் குறைத்தால் சிறப்பாக செயல்பட முடியும்.

3.. அநாவசிய சந்திப்புகள்

ஆன்-லைனிலேயே பல வேலைகளை முடிக்கும் அட்வான்ஸ்டு டெக்னாலஜி காலத்தில், தேவையில்லா நேரடி சந்திப்புகளை குறைத்துக் கொள்ளலாம். தெளிவில்லாத சந்திப்புகள் தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும்.

4.. ஒத்திவைத்தல்

அப்புறம், பிறகு, நாளை என தள்ளிப்போட்டு பல காரியங்கள் ஒரேயடியாகக் காணாமல் போன கதைகள் உண்டு. அதேபோல் சுலபமான வேலைகளை முதலில் முடித்துவிட்டு கடினமானதை கடைசியில் செய்வோம் எனவும் மறந்துவிடுவோம். இது தவிர்க்க வேண்டிய முக்கியப் பழக்கம்.

5.. ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது

வீடோ அல்லது அலுவலகமோ ஒரே இடத்தை தேய்க்காமல் அவ்வப்போது சிறிது தூரம் காலார நடப்பது, கணினித் திரையை விட்டு கண்களுக்கு ஓய்வு கொடுப்பது நல்ல புத்துணர்ச்சியைத் தரும்.

6.. முக்கியத்துவம் அளித்தல்

நிறைய குறிக்கோள்கள் இருப்பதில் தவறில்லை. ஆனால் அவைகளின் முக்கியத்துவம் உணர்ந்து செயல்படுவது வாழும் நாட்களை அர்த்தமுள்ளதாக்கும்.

6.. கண்விழித்த பிறகும் படுக்கையில் சுருண்டு கிடப்பது

படுக்கையில் ‘இன்னும் 5 நிமிஷம்’ என்று கேட்பவர்களில் பெரும்பாலானோருக்கு அப்பழக்கம், கூடுதல் எனர்ஜி, மேம்பட்ட சிந்தனை என கேட்பதில் இருப்பதில்லை. நிறைவான இரவுத் தூக்கமும் அதிகாலை கண்விழிப்பும் சிறந்ததொரு நாளைத் தரும்.

7.. ஓவர் ப்ளானிங்

இலட்சிய வெறி கொண்டோர் ஒரு நிமிஷத்தைக் கூட வீணாக்கமாட்டேன் என்ற பெயரில் தீவிரமாகப் ப்ளான் போட்டு செயல்படுவர். தங்கள் திட்டத்தில் சின்ன தடங்கள் ஏற்பட்டால் கூட சோர்ந்துவிடுவார்கள். இது பெரிய தடை.

8.. திட்டமிடல் இல்லாமை

எந்த திட்டமும் இல்லாமல் வாழ்க்கையில் போகிற போக்கில் வென்றிவிட முடியாது. இந்த எல்லையும் ஆபத்தானதே. லட்சியமில்லா வாழ்க்கை சுவாரஸ்யமற்றதாகிவிடும்.

9.. செல்போனே கதி என இருத்தல்

LED ஸ்கிரின்கள் கொண்ட செல்போன், லேப்டாப் போன்றவை வெளியிடும் ஒளி கண் திரையை பாதிக்கக்கூடியவை. தூங்கும் போது கூட செல்போனை தலைமாட்டில் வைத்து தூங்குவோர் தான் அதிகமாக மன அழுத்தத்தில் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

10.. மிஸ்டர்.பெர்ஃப்க்ட்

எல்லா காரியத்திலும் நேர்த்தியை எதிர்பார்ப்போர் செயல்படுவதைக்காட்டிலும் வேலையை தள்ளிப்போடுபவராகவே உள்ளனர். நேர்த்தி எல்லா விஷயத்திலும் கிடைத்துவிடாது. எல்லாராலும் மிஸ்டர்.பெர்ஃப்க்ட் ஆக முடியாது. வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake