வெயிலில் இருந்து உங்களைப் பாதுகாக்க இவ்வளவு டிப்ஸ்கள் இருக்கு…

First Published Aug 5, 2017, 1:19 PM IST
Highlights
There are so many tips to protect you from sunlight ...


1.. வெயிலுக்கு உகந்தது கதர் ஆடை. உடலில் உண்டாகும் வியர்வையை உறிஞ்சுவதுடன், வியர்க்குரு வருவதையும் தடுக்கும்.

2.. வெயில் காலங்களில் ஓட்டை விழுந்துள்ள ஓசோன் மண்டலத்தின் வழியாக அதிகமான அல்ட்ரா வைலட் கதிர்கள் பாயும். இதனால் கண்கள் பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க ‘ஆட்டோ ரிப்லக்ஸன் கிளாஸ்’ அணிவது நல்லது.

3.. உடல் சூட்டையும், தோல் நோயையும் தவிர்க்க அதிக இளநீர் அருந்துவதுடன், நுங்கு, வெள்ளரி, தர்ப்பூசணி அதிகம் சாப்பிட வேண்டும்.

4.. வியர்வை நாற்றத்தைப் போக்க குளிக்கும்போது எலுமிச்சம் பழத்தை அரிந்து, அதனுடன் சிறிது உப்பு தடவி கழுத்து, அக்குள் உள்ளிட்ட பகுதிகளில் தேய்த்து வந்தால் வியர்வை நாற்றம் வராது.

5.. கோடைக் காலத்தில் வரும் அக்கி அம்மை நோய்க்கு வெள்ளரியும், கிர்ணிப்பழமும் மகத்தானது.

6.. காஸ் நிரம்பியுள்ள குளிர்பானங்களை அருந்துவதைத் தவிர்த்து இந்தச் சீசனில் கிடைக்கும் பழ வகைகளை அதிகம் சாப்பிடுவது அவசியம்.

7.. ரோஜாப்பூ, குல்கந்து (தேனில் ஊற வைத்த ரோஜா இதழ்) சாப்பிட்டால் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்.

8.. வட்டமாக அரிந்த வெள்ளரியை கண்கள் மீது வைத்துக் கொண்டு உறங்கினால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.

9.. மருதாணியையும், கரிசலாங்கண்ணி இலையையும் சேர்த்துக் காய்ச்சப்பட்ட தேங்காய் எண்ணெயைத் தலைக்குத் தேய்த்துப்படுத்து, மறுநாள் காலை வில்வங்காய் கலந்த சிகைக்காய்ப் பொடி தேய்த்துக் குளிப்பது கோடைக் காலத்துக்கு உகந்தது.

10.. குளிக்கும்போது தேய்ப்பதற்கு என்று நாட்டு மருந்துக் கடைகளில் தனியாகப் பொடி விற்கப்படுகிறது. இதனை வாங்கி சோப்புக்குப் பதிலாகப் பயன்படுத்தி வந்தால் முகத்திலும், உடலிலும் எண்ணெய் வழியாமல் நிற்கும்.

click me!