வைரஸ் கிருமியால் வரும் அக்கிநோயை குணமாக்கும் இயற்கை மருத்துவம்!

 
Published : Feb 01, 2017, 01:25 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
வைரஸ் கிருமியால் வரும் அக்கிநோயை குணமாக்கும் இயற்கை மருத்துவம்!

சுருக்கம்

வெயில் காலங்களில் தாக்கும் நோய்களில் ஒன்றுதான் அக்கி நோய் ஆகும். இதுவும் அம்மை நோயினைப் போன்று வைரஸ் கிருமிகளால் வருவதுதான். ஆனால் அக்கிநோய் என்பது புதிதாக வருவதல்ல. அம்மை நோய் முன்பு தாக்கியவர்களிடம்தான் இந்நோய் வருகின்றது.

அம்மை நோய் வந்து போன பிறகு இந்த வைரஸ் கிருமிகள் முழுமையாக நீங்கி விடுவதில்லை. சில அம்மை வைரஸ் கிருமிகள் உடலில் தங்கி விடும். இவை பல வருடங்களுக்குப் பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது வெளி வந்து அக்கி நோயாக தோன்றும்.

இந்த நோய்க்கு கிராமங்களில் மண் பாண்டம் செய்யும் குயவர்களிடம் செல்வார்கள். அவர்கள் காவி மண்ணினால் அக்கி நோய் கண்டவரின் உடலில் காளி அம்மன் போன்று உருவம் வரைந்து மந்திரம் செபித்து அனுப்பி விடுவார்கள். வலியும், வேதனையும் நீங்கி குணமடைவர்.

அக்கி நோய்க்கு இயற்கை மருத்துவ முறையில் தீர்வுகள்…
1.. நாட்டு மருந்து கடைகளில் பூங்காவி எனக் கேட்டால் கொடுப்பார்கள். அதனுடன் பன்னீர் வாங்கி வந்து பூங்காவி பொடியை துணியில் வைத்து சளித்து எடுத்து பன்னீர் சேர்த்து குழைத்து அக்கி உள்ள இடங்களில் பூசவும். எரிச்சல், வலி, வேதனை குறையும்.

2.. ஊமத்தை இலை பறித்து வந்து அரைத்து அதனுடன் வெண்ணை சேர்த்து கலந்து அக்கியின் மேல் பூசவும்.கொப்புளங்கள் அடங்கும்.எரிச்சல்,வலி குறையும்.தொடர்ந்து ஒரு வாரம் போட்டு வரவும்.

உணவில் காரம், உப்பு, குறைக்கவும். குளிர்ச்சியான உணவுகள் உண்ணவும். வெயிலில் அலையக்கூடாது,

3.. சித்தா மருந்து கடைகளில் கிடைக்கும் குங்கிலிய பற்பம் 10-கிராம் வாங்கி அதில் ஒரு மொச்சை அளவு எடுத்து வெண்ணையில் [எலுமிச்சை]அளவு கலந்து காலை மாலை உண்ணவும். 7 நாள் தொடர்ந்து மருந்தை உண்டால் அக்கி  நோய் குணமாகும்.

PREV
click me!

Recommended Stories

Healthy Hair : இந்த உணவுகள் '40' வயசுக்கு பின் முடி உதிர்தலை அதிகரிக்கும்; எதை சாப்பிடக் கூடாது தெரியுமா?
Butter For Glowing Skin : தேவதை மாதிரி அழகில் மிளிர 'வெண்ணெயுடன்' இந்த '1' பொருள் சேர்த்து முகத்தில் தடவுங்க! நல்ல ரிசல்ட்