இவ்வளவு நன்மைகள் கிடைப்பதால்தான் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட சொல்றாங்க...

Asianet News Tamil  
Published : May 17, 2018, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
இவ்வளவு நன்மைகள் கிடைப்பதால்தான் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட சொல்றாங்க...

சுருக்கம்

The benefits of getting so much benefits are to eat green onion ...

வெங்காயத்தில் சல்பர், விட்டமின் C, B6, பயோடின், ஃபோலிக் அமிலம், குரோமியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது. 

இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...

** வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் தமனிகளில் ப்ளேக்குகளின் உருவாக்கத்தைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

** வெங்காயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுவாச குழாய் தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியில் இருந்து விடுபட உதவுகிறது.

** வெங்காயம் சளி, இருமல், காய்ச்சல், தும்மல் மற்றும் மூக்கு ஒழுகல் போன்றவற்றையும் தடுக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

** வெங்காயத்தில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மை சளி, காய்ச்சல், தும்மல், மூக்கு ஒழுகல், போன்ற நோய்களை சரிசெய்து, அல்சர் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

** வெங்காயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து, செரிமானம், மலச்சிக்கல், சிறுநீர்ப்பை கோளாறுகள் போன்ற பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.

** வெங்காயத்தில் உள்ள ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், காசநோயை ஏற்படுத்தும் மைகோபாக்டீரியத்தை செயலிழக்கச் செய்து, காசநோய் வராமல் தடுக்கிறது.

** பிரசவத்திற்கு பின் பெண்கள் வெங்காயத்தை சிறிது பச்சையாக தினமும் சாப்பிட்டால், அது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

** வெங்காயத்தில் கலோரிகள், சோடியம் குறைவு மற்றும் கொழுப்புகள் அற்றது என்பதால், அது ரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, ரத்தசோகை, உயர் இரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கிறது.

 

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!