உங்களுக்குத் தெரியுமா?  இந்த வைட்டமினுக்கு  மார்பக புற்றுநோயை தடுக்கும் சக்தி உண்டு...

 
Published : May 16, 2018, 01:45 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
உங்களுக்குத் தெரியுமா?  இந்த வைட்டமினுக்கு  மார்பக புற்றுநோயை தடுக்கும் சக்தி உண்டு...

சுருக்கம்

Do you know This vitamin has the power to prevent breast cancer ...

 

அமைதியாக மனிதர்களைத் தாக்கும் ஒரு கொடிய நோய் புற்றுநோய். இந்த புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அதில் பெண்களைத் தாக்குவது தான் மார்பக புற்றுநோய். 

தற்போது மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் பலருக்கும் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் சரியாக தெரிவதில்லை.

மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை மேற்கொண்டால் விரைவில் குணப்படுத்தலாம். ஆனால், சமீபத்திய ஆய்வு ஒன்றில், புற்றுநோய்க்கும், ஒரு குறிப்பிட்ட வைட்டமினுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த வைட்டமின் குறைபாட்டால் தான் மார்பக புற்றுநோய் வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதுதான் வைட்டமின் டி. 

வைட்டமின் டிமார்பக புற்றுநோயுடன் தொடர்பு கொண்டிருப்பது வைட்டமின் டி சத்து தான். இந்த வைட்டமின் டி சத்து ஒருவரது உடலில் குறைவாக இருந்தால், புற்றுநோய் வருவதற்கான அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வைட்டமின் டி-யின் இதர நன்மைகள் 

வைட்டமின் டி சத்து உடலில் போதுமான அளவில் இருந்தால், இதய நோய், சர்க்கரை நோய் போன்ற பல்வேறு நோய்கள் தடுக்கப்படும். ஆனால் புற்றுநோய்க்கு இந்த வைட்டமின் டி சத்து தான் எதிரி. இது பல்வேறு ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வைட்டமின் டி மார்பக புற்றுநோயை தடுக்கும்...

வைட்டமின் டி சத்திற்கு மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சக்தி உள்ளது. புற்றுநோயில் இருந்து ஒருவர் விடுபட வேண்டுமானால், ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது, உடற்பயிற்சிகளை செய்வது, சரியான அளவு தூக்கம் போன்றவற்றுடன், மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டும் இருக்க வேண்டியது அவசியம்.

இச்சத்து மார்பக புற்றுநோய் செல்களை அழிக்குமா? கலிபோர்னியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த மருந்துவர்கள், வைட்டமின் டி சத்து ஒவ்வொரு வகையான மார்பக புற்றுநோய்க்கனா எபிதீலியல் செல்களை அழிப்பதாக கூறுகின்றனர்.

வைட்டமின் டி உணவுகள் ஏற்கனவே மார்பக புற்றுநோய் இருப்பவர்கள், இந்த வைட்டமின் டி சத்தை உட்கொண்டால், அது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைய ஆரம்பித்துவிடும். 

இந்த வைட்டமின் டி சத்து மீன்கள், ஆரஞ்சு ஜூஸ், சோயா கால், சீஸ், முட்டை மஞ்சள் கரு போன்றவற்றில் அதிகம் உள்ளது. மேலும் அதிகாலை சூரியக்கதிர்கள் சருமத்தின் மீது படுமாறு உடற்பயிற்சியை செய்து வந்தாலும், உடலில் வைட்டமின் டி சத்தின் அளவு அதிகரிக்கும்.

PREV
click me!

Recommended Stories

Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!
Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க