எந்த வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லது? மஞ்சளா இருப்பதா? கருப்பு புள்ளிகள் நிறைந்ததா? 

 
Published : Jun 21, 2018, 04:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
எந்த வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லது? மஞ்சளா இருப்பதா? கருப்பு புள்ளிகள் நிறைந்ததா? 

சுருக்கம்

The answer to the question is Which bananas are good? To be yellow Is black spots filled?

வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் மாவுச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ் மற்றும் விட்டமின் போன்ற சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. 

ஆனால் இவ்வளவு சத்துக்கள் நிறைந்த வாழைப்பழத்தை மஞ்சளாக இருக்கும்போது சாப்பிட வேண்டுமா? கருப்பு புள்ளிகள் விழுந்தவுடன் சாப்பிட வேண்டுமா? 

என்ன குழப்பமாக இருக்கிறதா? பதில் தெரிஞ்சுக்க வாசிப்பை தொடருங்கள்... 

வாழைப்பழம் கருப்பு புள்ளிகள் விழுந்தவுடன் உண்பதுதான் நல்லது. ஏனெனில் அதுதான் மரபணு மாற்றப்படாத ஆரோக்கியமான வாழைப்பழம்.

** கருப்பு புள்ளிகள் அதிகமாக கொண்டுள்ள வாழைப்பழம் சாப்பிடுவதால், அது புற்றுநோய் எதிர்த்து போராடி, புற்றுநோய் கட்டிகள் உண்டாகாமல் தடுக்கிறது.

** கருப்பு புள்ளிகள் கொண்டுள்ள வாழைப்பழத்தில் தான் விட்டமின் B, C, பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் அதிகமாக உள்ளது.

** கருப்பு புள்ளிகள் உள்ள வாழைப்பழத்தை சாப்பிட்டால், அது செரிமானத்தை சீராக்கி, எளிதில் உணவுகளை ஜீரணம் செய்ய உதவுகிறது.

** கருப்பு புள்ளிகள் உள்ள வாழைப்பழம் சாப்பிடுவதால், புரோபயாடிக் அதிகமாக கிடைக்கிறது. மேலும் இது பெருங்குடல் ஆரோக்கியத்தை சீராக்குகிறது.

** கருப்பு புள்ளிகள் இருக்கும் வாழைப்பழத்தில் இயற்கை சர்க்கரை (இனிப்பு) அதிகம். 

** கருப்பு புள்ளி இல்லாத வாழைப் பழத்தில் மாவுச்சத்து அதிகம், இதனால், வயிறு சீக்கிரம் உப்பிவிடும். 

PREV
click me!

Recommended Stories

Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி
Hair Care : தலைக்கு குளிச்சிட்டு ரொம்ப நேரம் டவலை தலையில் கட்டுவீங்களா? இந்த 3 பிரச்சனைகள் வரும்!