ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெற முத்தான பத்து கட்டளைகள்…

 
Published : Feb 02, 2017, 02:09 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெற முத்தான பத்து கட்டளைகள்…

சுருக்கம்

1.. காலையில் ஆசனம், மாலையில் உடற்பயற்சி, இடைப்பட்ட நேரத்தில் தியானம் நாள்தோறும் செய்ய பழக வேண்டும்.

ஆசனப் பயிற்சி உடலின் உள் உறுப்புகளை நலம் பெறச் செய்யும், உடற் பயிற்சி உடலின் புற உறுப்புகளை வலுபெற செய்யும், தியானம் உள்ளதை தூய்மையாகவும், மனதை தெளிவாகவும் செய்யும்.

2.. காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் ஆகியவற்றை சேர்த்து வந்தால். வாதம், பித்தம், ஆகிய நோய்கள் இன்றி வாழலாம்.

3.. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுவதும், இரவில் சீக்கிரம் உறங்குவதும் நோய் தீர்க்கும் அன்றாட நடைமுறைகள் ஆகும்.

4.. பசித்து உணவு உண்ணவேண்டும். சாப்பிடும் பொழுது இடை இடையே தண்ணீர் அருந்துவதை தவிர்ப்பதும் நல்லது.

5.. மலம், ஜலத்தை உரிய நேரத்தில் வெளியிடமால் அடக்கி வைப்பதை தவிர்ப்பது நல்லது.

6.. புகையிலை சுருட்டு பொடி, முதலான தீய பழக்க வழக்கங்களை தவிர்ப்பதும் நல்லது .

7.. வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்து இள வெந்நீரில் குளிக்க வேண்டும். மாதம் இரு முறை உண்ணா நோன்பையும் இருத்தல் நல்லது.

8.. அளவுக்கு அதிகமான உப்பு நோயைத் தருவாதகும். உப்பு அது தப்பு என்பது இயற்கை மருத்துவர்களின் அறிவுருதலாகும் .

9.. உணவு வகைகளில் சோற்றைக் குறைவாகும், அதிகமாக கீரைகளையும், காய்கறிகளையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

10. உணவுக்கு பின் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து கொள்வது நல்லது. வெற்றிலை உணவை விரைவாக செரிக்க செய்யும்  .பாக்கு நுரையிரலில் ஏற்படும் சளிதொல்லையை தீர்க்கும் .சுண்ணாம்பு எலும்புகளுக்கு வலிமை சேர்த்து குடல் நோய்களை குணப்படுத்தும்.

PREV
click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
Skin Damaging Foods : முகப்பருக்களே இல்லாத சருமத்திற்கு இதுதான் ஒரே வழி! இந்த 7 உணவுகளை உடனே நிறுத்துங்க