ஸ்ட்ராபெர்ரி பழத்தின் மருத்துவ ரகசியம்…

 
Published : Oct 06, 2016, 08:24 AM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
ஸ்ட்ராபெர்ரி பழத்தின் மருத்துவ ரகசியம்…

சுருக்கம்

ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின் சத்துக்களும், செம்பு, மாங்கனீசு, அயோடின், பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.

இதில் ஆன்டி ஆக்சிடன்ட் எனப்படும் செல், அழிவினை தடுக்கும் தன்மை உள்ளது. இந்த தன்மை நிறைந்துள்ள பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளமாக இருக்கிறது.

மேலும், இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து மாரடைப்பு வராமலும் தடுக்கிறது. இதை சாப்பிட்டால் புற்றுநோய் வருவதைக் கூட தடுக்கலாம். மேலும், இது ரத்த சிவப்பணுக்களையும் உற்பத்தி செய்கின்றன. 

ஸ்ட்ராபெர்ரி பழச்சாற்றை தொடர்ந்து குடிப்பதால் பற்களில் கறை ஏற்படுவதை தவிர்க்கலாம். ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள அமிலங்களே பற்களில் ஏற்படும் கறைகளை நீக்க உதவுகின்றன. இனிமேல், ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிடும் போது அதன் மருத்துவ குணங்களை தெரிந்தே சாப்பிடலாமே

PREV
click me!

Recommended Stories

Mookirattai Keerai : பவர்புல் கீரை 'அனைத்து' பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு தரும் 'மூக்கிரட்டை கீரை' பத்தி தெரியுமா?
Walking Benefits : ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை '5' நிமிடம் வாக்கிங்! இதுவே போதும் '4' முக்கிய நன்மைகள் இருக்கு