மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வேண்டுமா?

 
Published : Oct 06, 2016, 08:19 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வேண்டுமா?

சுருக்கம்

டென்ஷன் டென்ஷன் டென்ஷன்..... இன்றைய காலகட்டத்தில் டென்ஷன் இல்லாத வாழ்க்கை என்பது கனவாக இருக்கிறது. சிரிச்சுக்கிட்டு எப்பவுமே ஹாப்பியா இருக்கணும்னு ஆசை மட்டுமே அனைவருக்கும் இருக்கும். அந்த ஆசை மட்டும் இருந்தால் போதாது, அதுக்கு நாம சில விஷயங்களை செய்யணும். அப்பதான், நம்மால டென்ஷன் இல்லாம இருக்க முடியும். வாருங்கள் அவை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

உங்களுக்கு பிறர் கெடுதல் செய்யும் போது, அதனை மன்னித்து விடுங்கள். ஏனெனில், தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது கடவுள் பண்பு. என்னங்க பழமொழி சொல்லி போர் அடிக்கிறேனா.

வேறு வழி இல்லையே. கடவுளாக இருந்தால் தான் ஆரோக்கியமா இருக்க முடியும் என்றால் அப்படி இருப்பதில் தவறு எதுவும் இல்லையே. போன முறை அவன் தவறு செய்யும் போது மன்னித்தேன்; இனி என்னால் முடியாது என்று சொல்லாமல் நீங்கள் பிறரை மன்னித்தால் தான் உங்கள் மனம் பண்படும்.

அதுமட்டுமல்லாமல் உங்களால் நிம்மதியாகவும் இருக்க முடியும். இதற்கு மருத்துவ ரீதியாகவும் நல்ல பலன் உண்டு.

மறப்போம் மன்னிப்போம்" என்பதை உங்களது குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் மன்னிக்க முடியாமல் இருக்கும் அவரைப் பார்த்த உடனே அவர் மீது கோபம் வந்து அந்த கோபம் டென்ஷனாக மாறி ரத்த அழுத்தம் ஆட்டோமேட்டிக்காக உயரும்.

இந்த ரத்த கொதிப்பு உங்களுக்கு பலவிதமான நோய்களை ஏற்படுத்தும். இதனால் நம் ஆரோக்கியம் தான் பாதிக்கும்.

அதேபோல், நீங்கள் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள். தெரிந்தோ, தெரியாமலோ பல வகைகளில் நாம் தவறு செய்திருக்கலாம். அப்படி செய்யும் போது அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்காதீர்கள். எந்த ஒரு வயது வித்தியாசம் பார்க்காமல் உங்கள் தவறை மட்டும் மனதில் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள்.

அப்படி கேட்கும் போது உங்கள் எதிரி நிச்சயம் பெருந்தன்மையாக நடந்து கொள்வார். அப்படி மன்னிக்காவிட்டாலும், கவலைப் படாதீர்கள். உங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் போதே நீங்கள் மன்னிக்கப்பட்டு விடுவதாக மனதார நம்புங்கள். இதனால் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும்.

தவறு செய்யும் நமக்கு மன்னிக்கவும் தெரிய வேண்டும், மன்னிப்புக் கேட்கவும் தெரிய வேண்டும். அதுமட்டுமல்ல அடிக்கடி ப்ளீஸ், தாங்க்யூ, ஸாரி, வணக்கம் போன்ற சொற்களைத் தேவையான இடத்தில் தவறாமல் பயன்படுத்துங்கள். அவை உங்களை பண்பு மிக்கவராகவும் ஆரோக்கியமானவராகவும் காட்டும்

PREV
click me!

Recommended Stories

Ragi Kanji : குளிர்காலத்தில் கட்டாயம் இந்த 'கஞ்சி' சாப்பிடனும்! நோஉ எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும்
Mookirattai Keerai : பவர்புல் கீரை 'அனைத்து' பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு தரும் 'மூக்கிரட்டை கீரை' பத்தி தெரியுமா?