ஆரோக்கியம் குறித்த சில கேள்விகளும், அதற்கான பதில்களும்…

 
Published : Feb 20, 2017, 01:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
ஆரோக்கியம் குறித்த சில கேள்விகளும், அதற்கான பதில்களும்…

சுருக்கம்

அல்சர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு என்ன?

உணவு கட்டுப்பாடு, இயற்கை முறையில் உற்பத்தி செய்த உணவு பொருட்களை உட்கொள்வது மற்றும் சிறந்த உணவு பழக்க வழக்கம் முதலியவற்றை கையாண்டால் அல்சர் ஏற்பட வாய்ப்பில்லை.

அல்சர் வந்த பிறகு உணவு கட்டுப்பாடு, நேரத்திற்கு உணவு அருந்துதல் மற்றும் மருந்து ஆகியவற்றை கடைபிடித்தால் அல்சர் பிரச்னைக்கு தீர்வு காணலாம்.

மேலும் அல்சரை உருவாக்குகிற ஹெச் பைலரி கிருமிகளை பரிசோதனையின் மூலம் கண்டுபிடித்து அதற்கேற்றாற் போல் மருந்து எடுத்து கொண்டால் அல்சரை குணப்படுத்தலாம்.

மாதவிடாய் தொந்தரவின் போது வயிறு வலிப்பது ஏன்?

ஒரு சிலருக்கு ஹார்மோனல் பிரச்னை இருந்தாலோ, கர்ப்பப்பை பிரச்னை இருந்தாலோ அல்லது அதிகமான ரத்த போக்கு இருந்தாலோ அல்லது கிருமி தொற்று ஏற்பட்டு வயிற்று வலி பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உடனே மகப்பேறு மருத்துவரை அணுகி அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து, ரத்த பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது.

உணவு செரிமானத்திற்கு பாக்டீரியாக்கள் துணை புரிகிறதா?

கண்டிப்பாக. மனித உடலில் உணவை செரிமானம் அடைய செய்யக்கூடிய நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இந்த பாக்டீரியாக்கள் இல்லையென்றால் உணவு செரிமானம் ஆகாது. சில சமயங்களில் வேறு பிரச்னைகளுக்கு மருந்து உண்ணும் போது அந்த மருந்தானது உணவை செரிக்கச் செய்யும் நல்ல பாக்டீரியாவையும் அழித்து விடுகிறது. அதனால் இப்படிப்பட்ட மருந்துகளை உட்கொள்ளும் போது நல்ல பாக்டீரியாவை உருவாக்கும் மருந்தையும் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

குடல் இறக்கத்தால் அவதிப்படுவோர் லேப்ராஸ்கோபி முறையில் அறுவை சிகிச்சை செய்யலாமா?

லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். அறுவை சிகிச்சை மருத்துவரிடம் எந்த விதமான அறுவை சிகிச்சை செய்யலாம் என்று ஆலோசிப்பது நல்லது.

பிரசவத்திற்கு பின் வரும் தொப்பையை குறைக்க என்ன செய்வது?

பிரசவம் ஆன பின்பு உடனே பெல்ட் அணிவது நல்லது. அது தவிர அடி வயிற்று உடற்பயிற்சி, கொழுப்பில்லாத உணவை உட்கொள்ளுதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். சொல்லப் போனால் அன்றாட வீட்டு வேலைகளை இயந்திரத்தின் துணை இல்லாமல் தாமாகவே செய்தால் தொப்பை ஏற்படாது.

வயிற்று வலிக்கு விளக்கெண்ணெய் தடவுவது பலன் அளிக்குமா?

பலனளிக்காது. வயிறு எதனால் வலிக்கிறது என்று கண்டறிய வேண்டும். அதாவது வயிற்று வலியின் காரணத்தை கண்டறிய வேண்டும். பின்பு அதற்கேற்றாற் போல் சிகிச்சை அளிக்க வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

Ladies Finger in Winter : குளிர்காலத்துல வெண்டைக்காய் 'கண்டிப்பா' சாப்பிடனும் தெரியுமா? நிபுணர்கள் சொல்ற அறிவியல் உண்மை
Green Peas Benefits : பச்சை பட்டாணியை அடிக்கடி சாப்பிடுங்க... பல பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வா அமையும்