மடிக்கணினி என்பதால் மடியில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை…

Asianet News Tamil  
Published : Feb 20, 2017, 01:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
மடிக்கணினி என்பதால் மடியில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை…

சுருக்கம்

மடியின் மீது லேப்டாப்பை அதிக நேரம் வைத்துப் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கள் யோசித்துக் கூட பார்த்து இருக்க மாட்டீர்கள்.

1.. ரோஸ்டட் ஸ்கின் சின்ட்ரோம்

லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துபவர்களுக்கு நிறச்சிதைவு நோய் அதிகம் வருகிறது. அதிலிருந்து வெளி வரும் வெப்பத்தால் தோல்பகுதி சிவந்து போகும். பிறகு அந்த இடத்தில் சிறிய கொப்புளங்கள் உருவாகி அரிப்பு ஏற்படும். அதை சொரியச் சொரிய அந்த இடத்தில் தோலின் நிறம் மாறி, தடித்த கறுப்பான தோலாக மாறிவிடும். இதற்கு ‘ரோஸ்டட் ஸ்கின் சின்ட்ரோம்’ என்று பெயர்.

காஷ்மீர் பகுதியில் உள்ளவர்கள் குளிரிலிருந்து தப்பிக்க, ஒரு பானை நிறைய நெருப்பைப் போட்டு அதை வயிற்றோடு சேர்த்து கட்டிக் கொள்வார்கள். அப்போதைக்கு குளிரில் இருந்து தப்பித்தாலும் நெருப்பால் உண்டான காயம் தோலில் தடிமனான ரோஸ்ட் போல தங்கிவிடும். இதுதான் ‘ரோஸ்டட் ஸ்கின் சின்ட்ரோம்’. இது போன்ற பாதிப்பு லேப்டாப் பயன்படுத்துவோருக்கும் வருகிறது.

2. கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்

லேப்டாப்பில் காரீயம் சேர்த்திருப்பார்கள். அதிக நச்சுத்தன்மை நிறைந்த இந்த தனிமம் உடலுக்கு பல ஆபத்துகளை உருவாக்கும். கான்டாக்ட் டெர்மடைட்டிஸ் என்ற அலர்ஜியை உருவாக்கும். இதனால் கொப்புளம், அரிப்பு, தோல் தடிப்பு போன்ற நோய்கள் வரும்.

3. கண்களின் இரத்த ஓட்டம் குறையும்

லேப்டாப்பை தொடர்ச்சியாக அருகில் வைத்து பார்ப்பதால் கண்ணுக்கு அடியில் ரத்த ஓட்டம் குறைந்து, கருவளையம் நிரந்தரமாகத் தங்கிவிடும்.

PREV
click me!

Recommended Stories

இனி ஒரு பரு கூட வராது! இந்த டிப்ஸ் Follow பண்ணுங்க போதும்
தினமும் ஒரு கப் கிரீன் டீ… உடம்பில் நடக்கும் அதிசயம்.!!