சிலவகை உடலியல் பிரச்சனைகளும் அவற்றிற்கான எளிய தீர்வுகளும்...

 
Published : Dec 18, 2017, 01:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
சிலவகை உடலியல் பிரச்சனைகளும் அவற்றிற்கான எளிய தீர்வுகளும்...

சுருக்கம்

Some Physical Problems and Simple Solutions for ...

பிரயாணத்தின் போது வாந்தி நிறுத்த: 

தினசரி ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட வாந்தி வராது.

தலைவலி, மூக்கடைப்பு நீங்க: 

நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி 1/2 லிட்டர் சாறு எடுத்து அதில் அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணையை கொதிக்க வைத்து அதில் நெல்லி சாறு கலந்து கொதிக்க வைத்து கொண்டு மூக்கில் நுகர தலைவலி போகும்.

காசம் இறைப்பு நீங்க: 

கா¢சலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.

தலைப்பாரம் குறைய: 

நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க: 

சிறு கெண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி கெண்டியை அடுப்பில் சூடேற்ற ஆவி வெளிவரும். வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.

தலைபாரம், நீரேற்றம் நீங்க: 

இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி தலையில் நெற்றியில் பற்று போட குணமாகும்.

கடுமையான தலைவலி நீங்க: 

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

சளித் தொல்லை நீங்க: 

ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டுப் புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித் தொல்லை நீங்கும்.

கபம் நீங்கி உடல் தேற: 

கா¢சலங்கன்னி செடியை வேருடன் பிடுங்கி அலசி நிழலில் உலர்த்தி பொடியாக்கி 100 கிராம் வறுத்து 5 கிராம் தினமும் காலை, மாலை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட சுபம் நீங்கி உடல் தோறும். மருந்து சாப்பிடும் காலத்தில் புலால் சாப்பிடக் கூடாது.

காசம் இறைப்பு நீங்க: 

காரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடிய செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.

PREV
click me!

Recommended Stories

Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க
Weight Loss Breakfast Ideas : கடினமான உடற்பயிற்சி இல்லாமலே 'எடையை' குறைக்கும் காலை உணவுகள்!