சில பழங்களின் மருத்துவத் தன்மையும் அவற்றால் கிடக்கும் நன்மைகளும்…

 
Published : Jun 22, 2017, 01:09 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
சில பழங்களின் மருத்துவத் தன்மையும் அவற்றால் கிடக்கும் நன்மைகளும்…

சுருக்கம்

Some of the medicinal properties of the fruit and the benefits they have ...

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிப்பவை பழங்கள் எனலாம். பழங்களில் இரும்புச் சத்துடன், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச் சத்துக்களும், வைட்டமின்களும் உள்ளன.

சில வகை பழங்களைத் தேனுடன் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது. சில பழங்களின் மருத்துவத் தன்மை, அவற்றால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் நன்மைகள் இதோ..

ஆப்பிள் பழத்துடன் தேன், ரோஜா இதழ்கள் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நோய் மற்றும் நரம்புத் தளர்ச்சி நீங்கும். ஆப்பிள் சாறானது, குழந்தைகளின் வயிற்றுப் போக்கை குணமாக்கும்.

எந்த வயதினரும் எந்த நோயாளியும் சாப்பிடக்கூடிய பழம் ஆரஞ்சுப் பழம். இது உடலுக்கு புத்துணர்ச்சியையும், வலுவையும் தருகிறது. கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு ஆரஞ்சுப் பழம் மிகவும் நல்லது.

சர்க்கரை சேர்க்காத திராட்சைப் பழச்சாறு நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. ஒரு அவுன்ஸ் அளவு திராட்சைச் சாறுடன் சிறிது கேரட் சாறு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர, சிறுநீர் தாரைகளில் உண்டாகும் கல் கரையும்.

இதயம், குடல், சிறுநீரகம் நன்கு இயங்க மாதுளம் பழச்சாறு மிகவும் சிறந்தது. மாதுளம் பழத்தில் குளுக்கோஸ் சக்தி அதிகம் இருப்பதால், உடல் சோர்வை உடனடியாக போக்கும் தன்மை கொண்டது.

அன்னாசிப் பழம் இதயத்திற்கு மிகவும் நல்லது. புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு அன்னாசிப் பழம் பயன்படுகிறது. உடல்சூடு உள்ளவர்களுக்கு அன்னாசிப் பழம் சாலச் சிறந்தது.

சப்போட்டா பழத்தில் அதிகளவில் இரும்புச் சத்து, பொட்டாசியம் சத்து, பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளதால், உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. சப்போட்டா பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் உயிரணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.

பப்பாளிப் பழத்தை துண்டுகளாக்கி சீரகப் பொடி, எலுமிச்சை பழச்சாறு கலந்து சாப்பிட்டால் அஜீரணம் குணமாகும். பப்பாளியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். தாய்ப்பால் அதிகம் சுரக்க பப்பாளிப் பழம் பயன்படுகிறது.

வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவதுடன், உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளிக்கொண்டு வர பயன்படுகிறது. எனவே அன்றாடம் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுதல் சிறந்தது.

PREV
click me!

Recommended Stories

Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி
Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்