உப்பிற்கு பதிலாக உப்பின் சுவையை கொடுக்கும் சில உணவுப் பொருட்கள்...

 
Published : Jun 22, 2017, 01:28 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
உப்பிற்கு பதிலாக உப்பின் சுவையை கொடுக்கும் சில உணவுப் பொருட்கள்...

சுருக்கம்

Some food items that give salt to salt instead of salt ...

மிளகுத்தூள்

மிளகு உணவுக்கு மிகவும் சுவையை அதிகமூட்டும் பொருட்களில் ஒன்று. இந்த மிளகை அரைத்து, பொடி செய்து உண்ணும் உணவுகளில் சேர்த்து வந்தால், அதன் சுவைக்கும் மணத்திற்கும், உப்பு பற்றிய எண்ணமே இல்லாமல் போய்விடும். ஆகவே எப்போது உணவில் சுவை, காரம் குறைவாக இருந்தாலும், அப்போது மிளகுத்தூளை தூவி சாப்பிடலாம்.

எலுமிச்சை

உணவின் சுவையை கூட்டுவதில் சிறந்த பொருள் தான் எலுமிச்சை. இந்த எலுமிச்சை உப்பு சுவையோடு இருக்காது. ஆனால் அதில் உள்ள புளிப்புத்தன்மை உப்பு சுவையை மறக்க வைக்கும். அதிலும் வீட்டில் செய்யும் சாலட், உணவுகளில் அதிகமாக உப்பை சேர்க்காமல், அதில் எலுமிச்சை சாற்றை பிளிந்து சாப்பிட்டால், நன்கு சுவையோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

சோயா சாஸ்

அனைவரும் சோயா சாஸில் அதிகமாக சோடியம் இருக்கிறது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏனெனில் சோயா சாஸில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று அதிக சோடியம் இருப்பது, மற்றொன்று குறைந்த சோடியம் இருப்பது. ஆனால் உண்மையில் சோயா சாஸ் ஒருவிதத்தில் சுத்தமான உப்பு வகையை சேர்ந்தது. அதனால் தான், ஒரு சில உணவுகளில் உப்பிற்கு பதிலாக சோயா சாஸை பயன்படுத்துகிறார்கள்.

அதிலும் தற்போது கடைகளில் குறைவாக சோடியம் இருக்கும் சோயா சாஸ்களும் விற்கப்படுகிறது. ஆகவே அதிக இரத்த அழுத்தம் இருப்பவர்கள், இத்தகைய சோயா சாஸை பயன்படுத்துவது சிறந்தது.

பூண்டுப் பொடி

கடைகளில் பூண்டு பவுடரை வாங்கியும் பயன்படுத்தலாம், அல்லது பூண்டை வாங்கி அதனை வறுத்து, அரைத்தும் பயன்படுத்தலாம். ஏனெனில் இந்த பவுடர் உணவில் நல்ல சுவை மற்றும் மணத்தை தருகிறது. இது ஒரு சிறந்த உப்பை உணவில் சேர்க்காமல், சுவையைக் கூட்டும் பொருள்.

சாட் மசாலா

இந்த மசாலாவில் அனைத்து வகையான காரமான சுவைகளும் கலந்திருக்கும். இதனை பொதுவாக சாட்ஸ் உணவுகளான பானி பூரி, பேல் பூரி போன்றவற்றிகலும் மற்றும் சாலட்டிலும் கலந்து சாப்பிடுவார்கள். வேண்டுமென்றால் இதனை வீட்டில் சமைக்கும் உணவுகளில் கலந்து சமைத்து சாப்பிட்டால், உப்பு போடாமலேயே உப்பு போட்ட சுவை கிடைக்கும். ஆனால் உண்மையில் இதில் உப்பு இல்லை.

வினிகர்

சாப்பிடும் சாலட் மற்றும் சூப்பில் உப்பை சேர்ப்பதற்கு பதிலாக, சிறிது வினிகரை தெளித்தால், அந்த உணவுப் பொருள் மிகவும் அருமையான சுவையில் இருக்கும். முக்கியமாக வினிகர் வாங்கும் போது, உப்பில்லாத வினிகரை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

 

PREV
click me!

Recommended Stories

Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி
Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்