ஆரோக்கியத்தை எக்கச்சக்கமாய் அள்ளித் தரும் சில பழங்கள்…

 
Published : Mar 16, 2017, 02:03 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
ஆரோக்கியத்தை எக்கச்சக்கமாய் அள்ளித் தரும் சில பழங்கள்…

சுருக்கம்

Some excess rich fruit plate

மாம்பழம்: 

பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழத்தின் பழத்தில் மட்டும் ஊட்டச்சத்தானது இல்லை, அதன் தோலிலும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதன் தோலை சாப்பிட்டால் நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்கள் குணமாவதுடன், இரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவை குறைத்துவிடும். ஆகவே இந்த மாம்பழத்தை தினமும் ஒரு துண்டுகளை தோலோடு சாப்பிட்டால் நல்லது.

ஆப்பிள்: 

நிறைய பேர் ஆப்பிளை சாப்பிடும் முன் அதன் தோலை நீக்கி விட்டு, பின் அதனை சாப்பிடுவர். ஆனால் அந்த ஆப்பிளின் தோலானது அவ்வளவு கடினமாக இருக்காது, இருப்பினும் அவ்வாறே உண்பர்.

அத்தகைய ஆப்பிளின் தோலை சாப்பிடுவதால் விரைவில் செரிமானமடைவதுடன், பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. ஆப்பிளின் தோலில் கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.

மேலும் அது டயட் மேற்கொள்வோருக்கு ஏற்ற அதிகமான நார்ச்சத்தானது உள்ளது. அதிலும் அளவுக்கு அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், உடலில் இருக்கும் செல்கள் வலுவடைவதுடன், இதய நோய் மற்றும் நீரிழிவு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இது தோலுடன் சாப்பிடும் பழங்களில் மிகவும் எளிதாக விழுங்கக்கூடிய பழம்.

எலுமிச்சை: 

எலுமிச்சையின் தோலை சாப்பிட்டால், உடலில் செரிமானமானது நன்கு நடைபெறும். இது வயிற்றில் ஏற்படும் தசைப்பிடிப்புகளை நீக்கும்.

ஒரு சிறு துண்டு எலுமிச்சை தோலை தினமும் சாப்பிட்டால், உடலில் இரத்த சுழற்சியானது நன்கு நடைபெறும்.

மேலும் ஆயுர்வேதத்தில் கல்லீரலில் ஏற்படும் நோய்க்கு, இந்த எலுமிச்சையின் தோலில் இருந்து சாற்றை எடுத்தே கொடுப்பர். அதிலும் ஆயுவேதத்தில் ஸ்கர்வி நோயை சரிசெய்ய, இந்த சாற்றையே கொடுப்பார்கள். தினமும் ஒரு சிறு துண்டுகளை சாப்பிட்டால் சருமமும் அழகாக இருக்கும்.

ஆரஞ்சு: 

ஆரஞ்சு பழத்தோலில் அதிக அளவு தாவர ஊட்டச்சத்துகள் மற்றும் ஃப்ளேவனாய்டுகள் உள்ளன. இதுவும் செரிமானத்திற்கு சிறந்தது.

மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கும். அதிலும் இதனை சமையலில் பயன்படுத்தினால், ஒரு நல்ல சுவையானது கிடைக்கும். இந்த ஆரஞ்சு பழத்தோலை அப்படியே சாப்பிட முடியாதவர்கள், அதனை சமையலில் சேர்த்து உண்ணலாம்.

கிவி: 

கிவி பழத்தின் தோலில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அளவுக்கும் அதிகமாக இருக்கிறது.

அதிலும் இதனை உண்பதால் இரத்தமானது லேசாக இருப்பதோடு, உடலில் எளிதாக நன்கு சுழற்சியானது நடைபெற்று, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

 ஆகவே இந்த பழத்தை தினமும் உண்டால், உடலுக்கு தேவையான சத்துக்களை எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.

 

PREV
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!