
சிறுநீரகக் கற்கள் என்பது பல்வேறு மினரல்கள் கலந்து கரைய முடியாத சிறு சிறு கல்லாய் மாறிவிடும்,
இவை சிறுநீரில் வெளியேற முடியாமல் அடைத்துத் தாங்க முடியாத வலியை உண்டாக்கும்.
பெரும்பாலும் கால்சியம் ஆக்ஸலெட் என்ற தாதுதான் சிறுநீரக கற்களாய் உடலில் தோன்றும்.
சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமனால் பாதித்தவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகும்.
சிறுநீரகக் கற்கள் உருவாகும் ஆபத்தில் இருப்பவர்கள் கீரைகள், ஆசஸலேட் உள்ள உணவுகள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளக்கூடாது.
அதிகமாக நீர் அருந்துதல் மிக முக்கியம்.
சிட்ரஸ் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க முடியும். மேலும் அவ்வாறு உருவாகிய கற்களைக் கரையச் செய்யும் ஆற்றல் உண்டு.
சிட்ரஸ் பழங்களிலுள்ள ஹைட்ராக்ஸி சிட்ரேட் என்ற பொருள் சிறு நீரகக் கற்கள் உருவாகக் காரணமான கால்சியம் ஆக்ஸலேட்டைக் கரையச் செய்து சிறு நீரகக் கற்களைப் போக்கும்.