குழந்தைக்கு ஏற்படும் ஜலதோஷமும் சளித் தொல்லைக்கு இதோ வீட்டு மருந்து…

Asianet News Tamil  
Published : Nov 11, 2017, 01:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
குழந்தைக்கு ஏற்படும் ஜலதோஷமும் சளித் தொல்லைக்கு இதோ வீட்டு மருந்து…

சுருக்கம்

remedy for cold for baby

 

குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், அடிக்கடி ஜலதோஷமும் சளித் தொந்தரவும் ஏற்படுகிறது.

வீட்டு வைத்தியத்தில் இதற்கு வழி இருக்கு..

அரை இன்ச் அளவுள்ள சுக்கை நன்றாக நசுக்கி, அதை ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். அது கால் கப் ஆக வரும் வரை கொதிக்க  விடவும். பிறகு அந்தத் தண்ணீரை வடிகட்டி, சம அளவு பால் கலந்து, அரை டீஸ்பூன் வெள்ளை கற்கண்டு பவுடர் கலந்து கொடுக்கலாம். வாரம் 2  அல்லது 3 நாள் என ஒரு மாதம் குடித்தால் சளி, ஜலதோஷம், தலைவலி என எந்தப் பிரச்னையும் நெருங்காது.

சிலர் கசப்பான பொருட்களை நாக்கில் படாமல் அப்படியே முழுங்குவார்கள். இனிப்பான பொருட்களை மட்டும் ருசித்துச் சாப்பிடுவார்கள். இது தவறான  பழக்கம். எல்லா ருசியும் நாக்கில் படவேண்டும். அப்படி இருந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். அறுசுவை களையும் குறைவில்லாமல் சரியான  விகிதத்தில் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஏற்படாது.

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க இயற்கை வைத்தியம் பெரிதும் பயன்படுகிறது. குழந்தைகள் உடலில் நோய்  எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் எளிதில் இருமல் தாக்கும். இருமல், சளி வந்ததும் அழையாத விருந்தாளியாக வந்து விடுவது மூச்சு பிரச்சனை.  இவை குழந்தைகளின் உடல்நலத்தை அடிக்கடி பாதிக்கும்.

இந்த வகையும் பொதுவான நோய்தொற்றுகளில் ஒன்று தான். குழந்தைகளை தாக்கும்  இருமல் பிரச்சனையிலிருந்து விடுபட ஓமவல்லி இலையை நன்கு கழுவி கொதிக்கும் சுடு தண்ணீரில் போட்டு ஒரு கப் வந்ததும் குழந்தைகளுக்கு  குடிக்க கொடுக்கவும் குடிப்பதற்கு முன்னர் ஒரு சில நிமிடங்கள் ஓய்வு எடுக்க செய்ய வேண்டும்.

இந்த மூலிகை தண்ணீர் குடித்து வந்தால் இருமல், சளி பிரச்னை வராமல் தடுக்கலாம். டயாபர் அதிகம் உபயோகிப்பதனால் குழந்தைகளுக்கு அரிப்பு,  அலர்ஜி போன்றவை ஏற்படுகிறது. இந்த அலர்ஜியை தடுக்க குழந்தைகளை குளிக்க வைப்பதற்கு வைத்துள்ள தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று  சொட்டு வெள்ளை வினிகர் கலந்து குளிக்க வைக்கலாம்.

கட்டைவிரலை உறிஞ்சும் பழக்கம் கொண்ட குழந்தைகளுக்கு மனதில் ஒரு வித பயம், தனிமையில் இருக்கிறோம் என்கின்ற செயல்பாடுகளின்  காரணமாகவே அவர்கள் கட்டை விரலை உறிஞ்சுகின்றனர். அதிகமான இளம் குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுவதால் குழந்தைகளுக்கு பசி  எண்ணமே இருக்காது.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake