இயற்கையில் இருக்கும் மருத்துவம் குறித்த உலக பழமொழிகள்…

 
Published : Nov 08, 2016, 06:21 AM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
இயற்கையில் இருக்கும் மருத்துவம் குறித்த உலக பழமொழிகள்…

சுருக்கம்

(1) வைகறையில் துயில் எழு.

(2) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

(3) உண்பதற்காக வாழாதே. வாழ்வதற்காக உண்.

(4) நீரை உண்; உணவை குடி (உணவை நன்கு மென்று கூழ் போலாக்கி குடிக்க வேண்டும். நீரை சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து பருக வேண்டும்)

(5) உணவும் மருந்தும் ஒன்றே.

(6) அஜீரணமும், மலச்சிக்கலும் ஆதிநோய்கள் பின்னால் வருபவை மீதி நோய்கள்.

(7) கடவுள் கனிகளை படைத்தார். சாத்தான் சமையலை படைத்தான்.

(8) படுக்கை காப்பி (BED COFFEE) படுக்கையில் தள்ளும்.

(9) பசிக்காக சாப்பிடு; உருசிக்காக சாப்பிடாதே

(10) சர்க்கரையும் உப்பும் விசங்களாகும்.

(11) சுத்தமான காற்று 100 அவுன்ஸ் மருந்துக்கு சமமாகும். - ஜப்பானிய பொன்மொழி

(12) சூரியன் இல்லாத இடத்திற்கு வைத்தியர் வருகிறார். - ஸ்பெயின் பொன்மொழி

(13) காலை 5 மணிக்கு எழு 9 மணிக்கு உண். மாலை 5 மணிக்கு உண் 9 மணிக்கு உறங்கு.

(14) வயிறு பெரிதாக உள்ள இடத்தில் மூளை சிறியதாக இருக்கும். - ஜெர்மன் பழமொழி.

(15) பஞ்சத்தையும் போரையும் விட அதிக மக்களை கொல்வது “பெருந்தீனியே”.

(16) சூரிய உதயத்திற்கு பின்பும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் உட்கொள்ளூம் உணவு ஆயுளை அதிகரிக்கிறது.

 

PREV
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!