முதுகுவலி வராமல் தடுக்க...!

 
Published : Nov 08, 2016, 06:16 AM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
முதுகுவலி வராமல் தடுக்க...!

சுருக்கம்

1. எப்போதும் சுறுசுறுப்போடு இருப்பது, பொதுவான உடற்பயிற்சிகள் செய்வது. உதாரணமாக நடப்பது, நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது.

2. தாழ்ந்த நாற்காலியில் அதிக நேரம் அமர வேண்டாம்.

3. உறங்கும் போது கடினமான மெத்தையை உபயோகிக்கவும் அல்லது தரையில் உறங்கவும்.

4. நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது இருக்கையை உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளவும், அதிக தூரம் பயணிக்கும் போது பிரேக் மெதுவாக அடிக்கவும்.

5. கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள் தங்கள் இருக்கையை சரிசெய்து, தனது முழு முதுகும் இருக்கையில் நிமிர்ந்தவாறு இருக்கும்படி செய்யவும்.

6. அதிக எடையை தூக்கும் போது உங்கள் மார்போடு அணைத்தபடி தூக்கவும்.

7. அதிக நேரம் முதுகு திரும்பியவாறு வேலை செய்ய வேண்டாம்.

8. அதிக நேரம் நின்று கொண்டே பயணிக்க வேண்டாம்.

9. முதுகுவலி எடுத்தால், நீண்ட நேரம் அமருவதை தவிர்க்கவும், 30 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து நில பொதுவான பயிற்சிகள் செய்யவும்.

PREV
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!