நோய் எதிர்ப்பு சக்தி அதிகாிக்க வேண்டுமா?? : ஒரு சூப்பா் யோசனை

 
Published : Oct 20, 2016, 02:37 AM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
நோய் எதிர்ப்பு சக்தி அதிகாிக்க வேண்டுமா?? : ஒரு சூப்பா் யோசனை

சுருக்கம்

உலகம் வேகமாக ஓடிக்காெண்டிருக்கிறது எனக்கூறி மனிதன் தனது வாழ்க்கையின் ஆயுளையும் வேகமாகவே முடித்துக்காெள்கிறான்.  தற்பாேது வாழ்க்கை முறைகள் இயற்கைக்கு மாறாக உள்ள நிலையில், அடிக்கடி புதிது புதிதாய் தோன்றும் ஏதேனும் ஒரு உடல்நல பிரச்சனையால் தற்போது ஏராளமானோர்  பாதிக்க‍ப்பட்டு வருகிறார்கள். இதற்கு அவர்களது நோய் எதிர்ப்புசக்தி பலவீனமாக இருப்பதுதான் முக்கிய காரணம். ஒருவரின் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதற்கு அவர்களது ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் முதன்மையான காரணமாக இருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தியை வலிமையுடன் வைத்துக் கொள்ள ஏராளமான வழிகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 1 டம்ளர் சுடு நீரில் 1 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடிப்பது. இந்த முறையை ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், நோயெதிர்ப்பு சக்தி வலிமையாவதோடு, இன்னும் வேறு பல நன்மைக ளும் கிடைக்கும்.

சுடுநீரில் மிளகுத்தூள் கலந்துகுடிப்பதால் உடலிலுள்ள செல்கள் ஊட்டம் பெற்று, நோயெதிர்ப்பு சக்தி வலிமையடைந்து, அதனால் நோய்களின் தாக்குதல்களில் இருந்து விலகி இருக்கலாம்.

சுடுநீரில் மிளகுத் தூள் கலந்து தினமும் காலையில் குடித்தால், உடலில் உள்ள செல்கள் நீர்ச்சத்தைப் பெ ற்று, உடல் வறட்சி, சோர்வு, வறட்சியான சருமம் போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

தினமும் காலையில் மிளகுத்தூள் கலந்த நீரைக் குடிப்பதா ல், உடலின் மெட்டபாலிசம் மற்றும் ஸ்டாமினா அதிகரித்து, உள்ளுறுப்பு மண்டலங்கள் சீராக இயங்குவதோடு, வலிமையாகவும் இருக்கும்.

சுடுநீருடன் மிளகுத்தூள் கலந்து பருகும்போது குடலியக்கம் மேம்பட்டு உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் வெளியேற்றப் பட்டு, மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் போன்ற பிரச்சனைகள் வரு வது தடுக்கப்படும்.

அதிகாலையில் மிளகுத் தூளை சுடுநீரில் சேர்த்து கலந்து பருகினால், உடல் மற்றும் சருமத்துளைகளில் இருக்கும் நச்சுக் கள் வெளியேற்றப்படுவதோடு, சருமத்தில் எண்ணெய் பசை உற்ப த்தியும் குறைந்து, சருமம் ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.

உடலை சுத்தம் செய்ய நினைப்பவர்கள், ஒரு மாதம் அதிகாலையில் வெறும் வயிற்றில் சுடுநீரில் மிளகுத் தூள் சேர்த் து கலந்து குடித்து வாருங்கள். இதனால் உடலில் உள்ள நச்சு மிக்க டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு உடலுறுப்புக்களின் செயல்பாடுகள் சீராக்கப்பட்டு மொத்தத்தில் உட லின் ஆரோக்கியம்மேம்பட்டு இருப்பதை நீங்களே உணர் வீர்கள். சுடுநீரில் மிளகுத் தூளைக் கலந்து தொடர்ச்சியாக பருகி வரும்போது உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டு, கொழுப் புச் செல்கள் கரைக்கப்பட்டு உடல் எடை வேகமாக குறையும்.

PREV
click me!

Recommended Stories

Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!
Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க