
நாள் பட்ட நெஞ்சு சளியை நீக்குவது கடினம். ஆரம்பத்திலேயே நெஞ்சு சளியை கண்டறிந்து நீக்கினால் மிக சுலபமாக நீக்கி விடலாம்.
ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிது தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் கற்பூரம் சேர்த்து நன்கு சுட வைக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக கற்பூரம் கரைய ஆரம்பிக்கும். கற்பூரம் நன்கு கரைந்ததும் பாத்திரத்தை இறக்கி விடலாம். சூடான எண்ணையை கையில் பட்டு விடாதவாறு பாதுகாப்பான இடத்தில் ஆர வைக்க வேண்டும். வீட்டில் குழந்தைகள் இருந்தால் மிக கவனம். சூடான எண்ணெய் கையில் பட்டால் ஆறுவதும் கடினம், தழும்பும் விரைவில் மறையாது.
தேங்காய் எண்ணெய் நன்கு ஆறியதும் அந்த எண்ணையை நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும். சிறிது குணம் தெரிந்தவுடன் விட்டு விட கூடாது. தொடர்ந்து தடவி வந்தால் நாள் பட்ட நெஞ்சு சளியையும் குணபடுத்தி விடலாம்.