உங்கள் முகத்தை பாழாக்குவதே, நீங்கள் பயன்படுத்தும் ஃபேர்னஸ் க்ரீம்கள்தான்…

 
Published : Mar 14, 2017, 02:16 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
உங்கள் முகத்தை பாழாக்குவதே, நீங்கள் பயன்படுத்தும் ஃபேர்னஸ் க்ரீம்கள்தான்…

சுருக்கம்

Palakkuvate your face you use krimkaltan Fairness

தங்களின் சருமத்தை வெள்ளையாக்க கடைகளில் விற்கப்படும் விலை குறைவாக உள்ள கண்ட ஃபேர்னஸ் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஃபேர்னஸ் க்ரீம்கள் தான் சருமத்திற்கு கேடு விளைவிக்கும். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், சரும செல்கள் பாதிக்கப்பட்டு, பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

இத்தகைய தொடர்ச்சியான பயன்பாட்டால் இளமையிலேயே முதுமை தோற்றத்தைக் கூடய பெறக்கூடும்.

ஃபேர்னஸ் க்ரீம்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சந்திக்க வேண்டிய பக்க விளைவுகள்..

1.. தொடர்ச்சியான ஃபேர்னஸ் க்ரீம் பயன்பாட்டினால், சருமம் மிகவும் சென்சிடிவ்வாகிவிடும். பின் வெயிலில் சென்றால் கூட, சருமத்தில் எரிச்சல், அரிப்பு, சில நேரங்களில் கொப்புளங்கள் என ஏற்படக்கூடும். அதுமட்டுமின்றி, ஃபேஸ் பேக் அல்லது ஃபேஸ் மாஸ்க் போட்டால் கூட, சருமத்தில் அரிப்புக்கள் ஏற்படும்.

2.. சில ஃபேர்னஸ் க்ரீம்கள் சிலருக்கு ஒப்புக் கொள்ளாது. இருப்பினும் அதிக பணம் கொடுத்து வாங்கிவிட்டோம் என்று சிலர் பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்தினால், சருமத்தில் பருக்கள் அதிகரித்து, அதனால் சருமத்தின் அழகு கெடும்.

3.. ஃபேர்னஸ் க்ரீம்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், சருமத்தின் நெகிழ்வுத்தன்மை தளர்ந்து, விரைவில் சுருக்கங்கள் விழுந்து, முதுமைத் தோற்றத்தைப் பெறக்கூடும்.

4.. சில நேரங்களில் ஃபேர்னஸ் க்ரீம்களில் உள்ள மெர்குரி, ஹைட்ரோகுவினோன் மற்றும் ஸ்ட்ரெடாய்டு போன்ற கெமிக்கல்கள் இருப்பதால், இவற்றை சருமத்தில் தடவி சூரியக்கதிர்களின் தாக்கத்தில் நீண்ட நேரம் இருந்தால், அதனால் சரும செல்கள் பாதிக்கப்பட்டு, சரும புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

5.. சில ஃபேர்னஸ் க்ரீம்களில் உள்ள கெமிக்கல்களால் சருமத்தின் நிறம் கருமையாகக்கூடும். எனவே எந்த ஒரு ஃபேர்னஸ் க்ரீம்மையும் பரிசோதித்துப் பார்க்காமல் பயன்படுத்த வேண்டாம்.

 

PREV
click me!

Recommended Stories

Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!
Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க