தேவையானவை:
கமலா ஆரஞ்சு – 2, தேன் – 2 தேக்கரண்டி.
செய்முறை:
கமலா ஆரஞ்சு பழத்தை தோல், விதைகளை நீக்கி, தேன் கலந்து மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும். தேவையென்றால் சிறிது தண்ணீர் கலக்கலாம். இதனை, வடிகட்டியும் குடிக்கலாம். வடிகட்டாமலும் குடிக்கலாம். இரண்டும் சிறந்ததே.
பலன்கள்:
** வைட்டமின் சி நிறைவாக உள்ளது. ஒருநாளுக்குத் தேவையான அளவு வைட்டமின் சி கிடைக்கும்.
** நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள ‘பெக்டின்’ எனும் ரசாயனம், குடலில் உள்ள நச்சுக்களை அகற்றும். செரிமான மண்டலத்தைச் சீர்செய்யும்.
** அன்டிஆக்சிடன்ட் நிறைந்தது. எனவே, புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும். குறிப்பாக, நுரையீரல் மற்றும் வயிறு தொடர்பான புற்றுநோய்களைக் தடுக்கும்.
** பொட்டாசியம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளன. தொடர்ந்து ஆரஞ்சு ஜூஸ் குடித்துவந்தால், சருமம் பொலிவாகும்.
** மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.