பாக்கெட்டுகளில் இருக்கும் நொருக்குத் தீனிகள் ஏற்படுத்தும் பாதிப்புகள்…

First Published Jan 9, 2017, 2:18 PM IST
Highlights


அதிக உப்பு நிறைந்த பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகளை உட்கொள்வது இருதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ஒரு பாக்கெட் ஃப்ரெஞ்ச் ப்ரை சாப்பிடுபவர்களுக்கு சரியாக 30 நிமிடத்தில் அதற்கான பாதிப்பு தெரியவரும்.

உப்பு சத்து அதிகம் நிறைந்த உணவு வகைகள் எளிதில் இரத்தத்தில் கலப்பதன் மூலம் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. அதுவும் எண்ணெயில் பொறித்த உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் இருதயத்திற்கு ஆபத்தானது.

ரத்த நாளங்கள் பாதிப்பு:

உப்பு அதிகம் பயன்படுத்தப்பட்ட நொறுக்குத் தீனியால் இரத்தமானது இருதய அறைகளுக்குள் செல்வதில் சிரமம் ஏற்படும். இரத்த அழுத்தமும் அதிகரிக்கும்.

குறைந்த அளவு உப்பு பயன்படுத்தும் போது இருந்த இரத்த ஒட்டத்தின் அளவானது, அதிக அளவு உப்பு பயன்படுத்தியவுடன் இரண்டு மணி நேரத்தில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். எனவே அதிக அளவு உப்பும், எண்ணெயில் பொறித்த உணவுகளில் உள்ள கொழுப்பும் இரத்த நாளங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இதயத்தை பாதிக்கிறது.

மேலும் உப்பும், கொழுப்பும் அடைப்பினை ஏற்படுத்தி நைட்ரிக் ஆக்ûஸடை வெளியிடுகின்றன. இதனால் இருதய பாதிப்பு உடனடியாக ஏற்படுகிறது.

எண்ணெயில் பொறித்து அதிகம் உப்பு சேர்க்கப்பட்ட ஃப்ரெஞ்ச் ப்ரைஸ், உள்ளிட்ட உணவுப் பண்டங்களில் அதிக அளவில் சாச்சுரேட்டட் ஃபேட்ஸ் உள்ளது. இவை இரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அதிக உப்பு சேர்க்கப்பட்ட எண்ணெயில் பொறித்த உணவுகளை உண்பது ஆயுளை குறைக்கும்.

click me!