இரத்த அணுக்களை அதிகரிக்கும் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள்..

 
Published : Mar 16, 2017, 02:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
இரத்த அணுக்களை அதிகரிக்கும் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள்..

சுருக்கம்

More nutrient rich foods increase blood cells

பீட்ரூட்: 

இதில் அதிகமான அளவு இரும்புச்சத்து இருப்பதோடு, உடலுக்கு தேவையான அளவு இரத்த அணுக்களை அதிகரிக்கும் புரோட்டீன் இருக்கிறது. மேலும் இதை உண்பதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் இது ஒரு சிறந்த இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுப் பொருள்.

அதிலும் பீட்ரூட்டின் இலைகளில் வைட்டமின் ஏ-வும், அதன் வேர்களில் வைட்டமின் சி-யும் இருக்கின்றன.

கீரைகள்: 

காய்கறிகளான பசலைக் கீரை, ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், டர்னிப், காலிஃபிளவர், கீரை மற்றும் இனிப்பு உருளைக்கிழங்குகள் ஆகிய அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமானவை.

மேலும் இவை அனைத்தும் உடல் எடையை கட்டுபடுத்துவதுடன், உடலில் இரத்த அணுக்களையும் அதிகரிக்கும். அதிலும் கீரைகள் செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்யும்.

இரும்புச்சத்து: 

இது உடலுக்கு மிகவும் தேவையான கனிமச்சத்து. இந்த சத்து எலும்புகளை மட்டும் வலுவாக்குவதில்லை, உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை விநியோகிக்கிறது.

இந்த சத்து குறைவாக இருந்தால் அனீமியா நோயானது வரும். ஆகவே அந்த இரும்புச்சத்துக்கள் இறைச்சி, வெந்தயம், அஸ்பாரகஸ், பேரிச்சம் பழம், உருளைக்கிழங்கு, உலர்ந்த அத்திப்பழம், உலர் திராட்சை போன்றவற்றில் இருக்கும்.

பாதாம்: 

இரும்புச்சத்து மற்ற உணவுப் பொருட்களை விட பாதாம் பருப்பில் அதிகம் இருக்கிறது. ஒரு நாளைக்கு 1 அவுண்ஸ் பாதாம் பருப்பை சாப்பிட்டால், உடலுக்கு 6% இரும்புச்சத்தானது கிடைக்கும்.

பழங்கள்: 

அனீமியாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடச் சொல்வார்கள். இவற்றை உண்பதால் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடலில் உள்ள இரத்த அணுக்களின் அளவும் அதிகரிக்கும்.

மேலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த பழங்களில் தர்பூசணி, ஆப்பிள், திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும்.

இந்தஉணவுப் பொருட்களை உண்பதால் உடலில் இரத்த அணுக்களின் அளவு அதிகரிப்பதோடு, உடலை எந்த ஒரு நோயும் தாக்காமல் ஆரோக்கியமாக வாழலாம்.

PREV
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!