தொப்பையை இருந்த இடம் தெரியாமல் போக்க உதவும் மிராக்கல் டிப்ஸ்...

 
Published : Dec 21, 2017, 01:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
தொப்பையை இருந்த இடம் தெரியாமல் போக்க உதவும் மிராக்கல் டிப்ஸ்...

சுருக்கம்

Miracle Tips That Help reduce fat

** காலை எழுந்தவுடன் மிதமான சுடுநீரில் தேன் கலந்து குடிங்க; பாருங்க, இரண்டு மாதங்களில் தொப்பை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

** இஞ்சியை சாறு பிழிந்து தேன் விட்டு சூடுபடுத்தி ஆற வைக்க வேண்டும். உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் சேர்த்து அருந்தி வந்தால் 40 நாட்களில் தொப்பை குறையும்.

** அன்னாசிக்கும் இந்த குணம் உண்டு. முதல் நாள் இரவு ஓர் அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து நன்றாக கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் சிக் உடலுக்கு கைகொடுக்கும்.

** மருந்துகளில் வீரியம் அதிகமாக இருந்தால், தேனை கலந்து சாப்பிடும் போது குடல்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளை தடுத்து நிறுத்திவிடும். தேன் சேர்த்து தயாரிக்கும் உணவுகள் மருந்து, நீண்ட நாள் கெடுவதில்லை. 

** தேனில் சர்க்கரை சத்து அதிகமாக இருப்பதால் கடும் உழைப்பாளிகள், விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவோர் அவ்வப்போது தேன் கலந்த பானம் பருகலாம். இதனால், உடலில் ஏற்படும் களைப்பு நீங்கும். 

** தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய ரத்த நாளங்களை சீராக விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால், இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும். கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம்.

PREV
click me!

Recommended Stories

Exercises For Joint Pain : மூட்டு வலி அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி!! ஒரே வாரத்தில் நிவாரணம்; ஒரே ஒரு பயிற்சி போதும்
Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!